ADDED : ஜூலை 01, 2026 11:27 PM

அ நிறம் | அளவு
பெங்களூரு தெற்கு மாவட்டம் கனகபுரா தாலுகாவில் அரேகொப்பா கிராமத்தில், காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் எல்லையில் அமைக்கப்பட்டிருந்த ரயில்வே தண்டவாள தடுப்பை தாண்ட முயன்ற காட்டு யானை அதில் சிக்கிக் கொண்டது.
தகவல் அறிந்த வனத்துறையினர், யானைக்கு மயக்க மருந்து செலுத்தி, நான்கு மணி நேர போராட்டத்துக்கு பின், யானையை மீட்டனர். மயக்கம் தெளிந்த யானை, மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
