/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜப்பான் சென்ற யானைகள் ஆரோக்கியம் என தகவல்
/
ஜப்பான் சென்ற யானைகள் ஆரோக்கியம் என தகவல்
ADDED : ஜூலை 26, 2025 11:03 PM

பெங்களூரு: ஜப்பான் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்ட யானைகள் ஆரோக்கியத்துடன் இருப்பதாக அங்குள்ள பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு பன்னரகட்டா உயிரியல் பூங்கா, ஜப்பானில் உள்ள ஹிமேஜி மத்திய பூங்காவுடன் விலங்குகள் பரிமாற்றம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதன்படி, பன்னரகட்டா பூங்காவில் இருந்து சுரேஷ், 8, கவுரி, 9, ஸ்ருதி, 7, துளசி, 5, ஆகிய நான்கு ஆசிய யானைகள், கடந்த 24ம் தேதி, கெம்பே கவுடா விமான நிலையத்தில் இருந்து, கத் தார் ஏர்வேஸ் சரக்கு விமானம் மூலம் ஹிமேஜி பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்த நான்கு யானைகளும் நேற்று ஹிமேஜி பூங்காவில் உள்ள கூண்டுகளில் அடைக்கப்பட்டன; யானைகள் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், அவைகள் உணவு சாப்பிடும் வீடியோவை பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ளது.