/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடகாவுக்கு நிதி கிடைப்பதை உறுதி செய்யுங்கள்! 16வது நிதி ஆணையத்திடம் முதல்வர் சித்து வலியுறுத்தல்
/
கர்நாடகாவுக்கு நிதி கிடைப்பதை உறுதி செய்யுங்கள்! 16வது நிதி ஆணையத்திடம் முதல்வர் சித்து வலியுறுத்தல்
கர்நாடகாவுக்கு நிதி கிடைப்பதை உறுதி செய்யுங்கள்! 16வது நிதி ஆணையத்திடம் முதல்வர் சித்து வலியுறுத்தல்
கர்நாடகாவுக்கு நிதி கிடைப்பதை உறுதி செய்யுங்கள்! 16வது நிதி ஆணையத்திடம் முதல்வர் சித்து வலியுறுத்தல்
ADDED : ஜூன் 13, 2025 11:14 PM

“கர்நாடகாவுக்கு நிதி அளிப்பதை உறுதி செய்யுங்கள்,” என, 16வது நிதி ஆணையத்திடம் முதல்வர் சித்தராமையா வலியுறுத்தினார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று டில்லி சென்றார். அங்கு 16வது நிதி ஆணையத்தின் தலைவர் அரவிந்த் பனகாரியா, ஆணையத்தின் உறுப்பினர்களை சந்தித்து, நிதி ஆணையத்திடம் இருந்து கர்நாடகாவுக்கு வர வேண்டிய வரி பங்கீடு குறித்து விவாதித்தார்.
அப்போது சித்தராமையா பேசியதாவது:
நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் கர்நாடகாவின் பங்கு முக்கியமானது. மக்கள்தொகையில் 5 சதவீதம் மட்டுமே உள்ள கர்நாடகா, தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 8.7 சதவீத பங்களிப்பு கொடுக்கிறது. ஜி.எஸ்.டி., வரி வசூலில் நாட்டில், கர்நாடகா இரண்டாவது இடத்தில் உள்ளது.
எங்களிடம் இருந்து பங்களிப்பு நிறைய இருக்கும்போது, எங்களுக்கு வரி பங்கீட்டில் அநீதி நடக்கிறது. நாங்கள் ஒரு ரூபாய் கொடுத்தால் 15 பைசா மட்டுமே எங்களுக்கு திரும்பக் கிடைக்கிறது. 15வது நிதி ஆணையத்தின் கீழ் கர்நாடகாவின் வழங்க வேண்டிய, வரி பங்கு 4.713 சதவீதத்தில் இருந்து 3.647 சதவீதமாக குறைத்திருப்பதன் மூலம், எங்களுக்கு 80,000 கோடி ரூபாய்க்கு மேல், இழப்பு ஏற்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு பகிரப்படும் வரிகள் பங்கை, குறைந்தபட்சம் 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். செஸ் வரி, கூடுதல் கட்டணங்களை 5 சதவீதம் குறைக்க நாங்கள் முன்மொழிந்துள்ளோம். வலுவான பொருளாதார செயல்திறன் மற்றும், சிறந்த நிதி நிர்வாகத்தை வழங்கும், மாநிலங்களை பாதிக்கப்படக்கூடாது. அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சூத்திரத்தை பயன்படுத்தி, அதிகார பகிர்வு மூலம், வருவாய் பற்றாக்குறை மானியங்களை மறுபகிர்வு செய்ய வேண்டும்.
வருவாய் பற்றாக்குறை மானியங்கள் அடிப்படையிலான நெறிமுறை அனுமானங்கள், பெரும்பாலும் செலவின முன்னுரிமைகளின் அகநிலை மதிப்பீடுகளை பிரதிபலிக்கின்றன.
பெங்களூரில் மேற்கொள்ளப்படும் முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும். கர்நாடக பொருளாதாரத்திற்கு பெங்களூரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், 1.15 லட்சம் கோடி முதலீட்டிற்கு ஆதரவு தேவைப்படுகிறது.
மோசமான உள்கட்டமைப்பை எதிர்கொள்ளும் கல்யாண கர்நாடகா மற்றும் மற்ற பகுதிகளுக்கு இடையில் உள்ள, இடைவெளியை குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது.
வளர்ச்சியும், சமத்துவமும் இணைந்து ஒரே பாதையில் செல்ல வேண்டும். நியாயமான நிதி பரவலால் ஆதரிக்கப்படும் கர்நாடகா, வலுவான இந்தியாவிற்கு அவசியம். கர்நாடகாவின் நிதி வலிமை தேசிய வளர்ச்சியை துாண்டுகிறது. வளர்ச்சி தண்டிக்கப்படாமல், நிதி அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய நேரம் இது.
இவ்வாறு அவர் பேசினார்
- நமது நிருபர் -.