/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எத்னால் ஒரு போலி ஹிந்து; ரேணுகாச்சார்யா கிண்டல்
/
எத்னால் ஒரு போலி ஹிந்து; ரேணுகாச்சார்யா கிண்டல்
ADDED : ஏப் 03, 2025 07:52 AM

தாவணகெரே : “எத்னால் ஒரு ஹிந்து புலி அல்ல; அவர் ஒரு போலி ஹிந்து,” என, முன்னாள் அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ரேணுகாச்சார்யா கிண்டல் செய்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ரேணுகாச்சார்யா நேற்று முன்தினம் அளித்த பேட்டி:
எத்னால் புதிதாக கட்சி துவங்கினால் மகிழ்ச்சி. முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை விமர்சனம் செய்தால் முதல்வராகலாம் என, எத்னால் பகல் கனவு காண்கிறார். எத்னால், தன் சர்வாதிகார மனப்பான்மையை கைவிட வேண்டும். அவர் தன்னை தானே தலைவர் என நினைக்கக் கூடாது.
எத்னால் உண்மையிலே ஹிந்துத்துவாவாதியாக இருந்தால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நின்று ஜெயித்து காட்டட்டும். அப்போது தான் அவர் ஒரு உண்மையான ஹிந்துத்துவாவாதி.
எத்னால் டிபாசிட் கூட வாங்க முடியாது. அவர் புதிய கட்சியை துவங்கினால், 224 தொகுதிகளுக்கும் வேட்பாளரை நிறுத்த முடியாது. எத்னால் ஒரு போலியான ஹிந்துத்துவாவாதி.
ஹிந்து மதம் குறித்து தேர்தல் பிரசாரங்களில் பேசுவது மட்டுமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும். காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததில் எத்னாலின் பங்கும் உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.

