/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வன ஊழியர் மாயம் குடும்பத்தினர் கலக்கம்
/
வன ஊழியர் மாயம் குடும்பத்தினர் கலக்கம்
ADDED : ஜூலை 01, 2025 03:30 AM

சிக்கமகளூரு: சகராயபட்டணா பகுதியில் பணியாற்றி வந்த வனத்துறை பாதுகாவலர் காணாமல் போனதால், குடும்பத்தினர் கலக்கத்தில் உள்ளனர்.
குடகு, மடிகேரியை சேர்ந்தவர் சரத், 33; வன பாதுகாவலர். தற்போது சிக்கமகளூரு மாவட்டம், கடூர் தாலுகாவின், சகராயபட்டணா வனப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தார்.
ஜூன் 27ம் தேதி பணிக்கு சென்ற இவர், வீடு திரும்பவில்லை. கலக்கம் அடைந்த குடும்பத்தினர், பல இடங்களில் தேடினர்.
எந்த தகவலும் தெரியாததால், சகராயபட்டணா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசாரும், வனத்துறையினர் உதவியுடன், வனப்பகுதியில் தேடி வந்தனர். மூன்று நாட்களாகியும் அவரைப் பற்றி, எந்த தகவலும் கிடைக்கவில்லை.
சகராயபட்டணா வனப்பகுதியில், நீலகிரி பிளாண்டேஷனில் சரத்தின் பைக்கும், ஜெர்கினும் கண்டுபிடிக்கப்பட்டன.
அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. போலீசார் இரவு, பகலாக தொடர்ந்து தேடுகின்றனர்.
வன விலங்குகள் அல்லது கொள்ளை கும்பலால் ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என, குடும்பத்தினர் அஞ்சுகின்றனர். இவர்களுக்கு போலீசார் ஆறுதல் கூறியுள்ளனர். சரத்தை கண்டுபிடிப்பதாக நம்பிக்கை அளித்துள்ளனர்.