/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆர்.டி.ஐ., ஆவணங்களுக்காக பசுவை விற்ற விவசாயி
/
ஆர்.டி.ஐ., ஆவணங்களுக்காக பசுவை விற்ற விவசாயி
ADDED : நவ 23, 2025 04:13 AM

ஆர்.டி.ஐ., ஆவணங்களுக்காக பசுவை விற்ற விவசாயி
ஹாசன்: கிராம பஞ்சாயத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், 16 ஆயிரம் பக்க ஆவணங்களை பெறுவதற்காக தன் ஒரு பசுவை விவசாயி ஒருவர் விற்ற சம்பவம் நடந்துள்ளது.
ஹாசன் மாவட்டம், அரகலக்கூடின் ராமநாதபுரா பேரூராட்சி, பசவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரவி.
கலேனஹள்ளி கிராம பஞ்சாயத்து மேற்கொண்ட பணிகள் குறித்து ஆவணங்கள் தரம்படி, பொதுப்பணித் துறையிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். 16,370 பக்கங்களை கோரினார்.
அதற்கு துறை அதிகாரிகள், ஒரு பக்கத்துக்கு இரண்டு ரூபாய் வீதம், 32,340 ரூபாயை, 'டிடி'யாக எடுத்துத் தரும்படி கூறினர்.
அவ்வளவு தொகை தன்னிடம் இல்லாததால், தான் வைத்திருந்த இருந்த இரண்டு பசுக்களில், ஒன்றை விற்று, பொதுப் பணித் துறையிடம் வழங்கினார். இந்த ஆவணங்களை, பொதுப்பணி துறையினர், தபால் மூலம் அனுப்பினர். இத்தகவல் ரவிக்கும் தெரிவிக்கப்பட்டது. மாட்டு வண்டியில் தபால் நிலையத்துக்கு வந்த அவர், ஆவணங்களை வண்டியில் ஏற்றினார்.
புறப்படுவதற்கு முன், அவர் கூறியதாவது:
இந்த ஆவணங்களை நிதானமாக ஆய்வு செய்வேன். முறைகேடுகள் நடந்திருந்தால், லோக் ஆயுக்தாவில் புகார் அளிப்பேன். இந்த ஆவணங்கள் கேட்டு விண்ணப்பித்ததில் இருந்து, இதை வாபஸ் பெறும்படி பல வழிகளில் நெருக்கடி கொடுத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், தகராறு செய்வதாக என் மீது போலீசில் பொய் புகார் அளித்தனர். இத்தகைய மிரட்டலுக்கு அடிபணிய மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

