/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய விவசாயிகள் போர்க்கொடி
/
அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய விவசாயிகள் போர்க்கொடி
அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய விவசாயிகள் போர்க்கொடி
அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய விவசாயிகள் போர்க்கொடி
ADDED : நவ 03, 2025 04:20 AM
சாம்ராஜ்நகர்: ''மனித - விலங்கு மோதல் ஏற்பட்டால் அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள், அதி காரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்,'' என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
சாம்ராஜ் நகர், மைசூரு மாவட்டங்களில் அதிகளவில் மனித - விலங்குகள் மோதல், பயிர்கள் நாசமடைகின்றன. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து முதல்வர் சித்தராமையா உத்தரவுப்படி, சாம்ராஜ் நகர் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில், நேற்று அமைச்சர்கள் வெங்கடேஷ், ஈஸ்வர் கன்ட்ரே தலைமையில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது:
வனத்துறையில் பல ஊழல்கள், முறைகேடுகள் நடக்கின்றன. நாட்டின் வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத அளவில் கர்நாடகாவில் மனித - விலங்கு மோதல் அதிகரித்து உள்ளன. இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்.விலங்குகளால் மனித உயிர்கள் பறிபோனால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், வனத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். புலிகள், மனிதர்கள் இறப்புக்கு வனத்துறை அமைச்சரும், அதிகாரிகளுமே காரணம். இவ்விஷயத்தில் அமைச்சர் ஏற்கனவே தன் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
இதுபோன்று முன்னரே கூட்டம் நடத்தியிருந்தால், உயிரிழப்பு நடந்திருக் காது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அமைச்சர் வெங்கடேஷ் கூறுகையில், ''புலி, யானைகள் - மனிதர்கள் மோதலை தடுக்க, அதிகாரிகளுடன் ஆலோசித்து நிரந்தர தீர்வு காணப்படும். விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து முத ல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

