sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மகனை கொன்று துண்டு துண்டாக வெட்டிய கொடூர தந்தை கைது

 மகனை கொன்று துண்டு துண்டாக வெட்டிய கொடூர தந்தை கைது

 மகனை கொன்று துண்டு துண்டாக வெட்டிய கொடூர தந்தை கைது


ADDED : மார் 08, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 05:23 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஜயநகரா: இளைஞர் கொலையாகி துண்டு, துண்டாக வெட்டப்பட்டு வீசப்பட்ட சம்பவத்தில், சம்பவத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தந்தையே கொலையாளி என்பது தெரிய வந்துள்ளது.

விஜயநகரா மாவட்டம், ஹூவினஹடகலி தாலுகா, பீரப்பி கிராமத்தில் வசிப்பவர் லட்சுமப்பா, 55. இவரது மகன் பீரேஷ், 25. இவர் கிராமத்தில் ஆடு மேய்க்கும் வேலை செய்து வந்தார். பிப்ரவரி, 11ம் தேதி வெளியே சென்ற பீரேஷ், மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர்.

அவரை பற்றி எந்த தகவலும் தெரியாத காரணத்தால், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன், பீரேஷின் வீட்டு பின் பகுதியில், துர்நாற்றம் வீசியது.

விலங்கு ஏதாவது செத்திருக்கலாம் என்று நினைத்த குடும்பத்தினர் பின்புறம் சென்று பார்த்த போது, பிளாஸ்டிக் மூட்டை இருந்தது.

அதை பிரித்து பார்த்த போது, பீரேஷ் கொலை செய்யப்பட்டு, துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. தகவலறிந்து அங்கு வந்த ஹிரேஹடகலி போலீசார், உடலை மீட்டு விசாரணையில் இறங்கினர்.

பல கோணங்களில் விசாரணை நடத்திய போது, பீரேஷை கொலை செய்தது அவரது தந்தை லட்சுமப்பா என்பது கண்டுபிடிக்கப்பட்டது. லட்சுமப்பாவின் மனைவிக்கு, வேறு ஆணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதை கண்டிக்காமல், பீரேஷ் ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது. அதனால், கோபமடைந்த லட்சுமப்பா, இரண்டு வாரங்களுக்கு முன், மகனை கோடாரியால் வெட்டி, உடலை துண்டுகளாக்கி வீட்டின் பின்புறம் வீசியது, விசாரணையில் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us