தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/வாகனங்கள் மோதலில் தந்தை, மகள் பலி

வாகனங்கள் மோதலில் தந்தை, மகள் பலி

வாகனங்கள் மோதலில் தந்தை, மகள் பலி


UPDATED : நவ 29, 2026 12:00 AM

ADDED : நவ 28, 2026 11:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 12:00 AM ADDED : நவ 28, 2026 11:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தாவணகெரே: சரக்கு வாகனம் -– பைக் விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்தனர்.

தாவணகெரே மாவட்டம், ஹரிஹரா நகரின் ஆஷ்ரயா காலனியில் வசித்தவர் மனோஜ், 35. டாக்சி ஓட்டுநராக பணியாற்றினார். மனோஜ் தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன், திருவிழாவுக்காக கல்லனஹள்ளிக்கு சென்றிருந்தார்.

ஹரிஹராவின் தீடூர் கிராமத்தின் கங்கநரசி கிராஸ் அருகில் வரும் போது, எதிரே வேகமாக வந்த சரக்கு வாகனம், பைக் மீது மோதியது. இதில் தம்பதியும், குழந்தைகளும் கீழே விழுந்தனர். பலத்த காயமடைந்த மனோஜும், இவரது மகள் த்ருதி, 3, என்பவரும், மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, வழியில் உயிரிழந்தனர்.

மனைவியும், இரண்டு குழந்தைகளும் சிகிச்சை பெறுகின்றனர். ஹரிஹரா ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us