தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு 20 ஆண்டு சிறை

 மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு 20 ஆண்டு சிறை

 மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு 20 ஆண்டு சிறை


ADDED : மார் 08, 2026 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 05:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விஜயபுரா: மனைவி மீதுள்ள கோபத்தில், ஐந்து வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, விஜயபுரா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விஜயபுரா மாவட்டம் சடசனா தாலுகா, இஞ்சகேரி கிராமத்தை சேர்ந்தவர் சோமநிங்கா, 35. இவருக்கு திருமணமாகி ஐந்து வயதில் மகள் உள்ளார். குடும்ப பிரச்னையால், தம்பதிக்கு இடையே அவ்வப்போது வாக்குவாதம் நடக்கும்.

கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி, விநாயகர் சதுர்த்தி நேரத்தில், தம்பதிக்குள் சண்டை நடந்தது. கோபமடைந்த சோமநிங்கா, மனைவியை பழி வாங்கும் நோக்கில், மகளை விநாயகர் சிலைகளை காட்டுவதாக கூறி, விஜயபுரா மாவட்டத்தின் ஆலகுன்டே கிராமத்துக்கு அழைத்து வந்தார். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, மகளை பாலியல் பலாத்காரம் செய்தார்.

வீட்டுக்கு வந்த மகள் சோர்ந்திருப்பதை பார்த்த தாய், விசாரித்த போது தந்தையின் செயலை கூறினார். கோபமடைந்த தாய், விஜயபுராவின் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசாரும் சோமநிங்காவை கைது செய்தனர்.

விசாரணையை முடித்து, விஜயபுராவின் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.

விசாரணையில் சோமநிங்காவின் குற்றம் உறுதியானதால், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 50,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சிந்து பொததாரா நேற்று தீர்ப்பளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us