/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குடிக்க பணம் தர மறுத்த தந்தை கொலை; மகன் கைது
/
குடிக்க பணம் தர மறுத்த தந்தை கொலை; மகன் கைது
ADDED : நவ 05, 2025 07:52 AM

சிக்கபல்லாபூர்: மது குடிக்க பணம் தரவில்லை என்பதால், தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
சிக்கபல்லாபூர் மாவட்டம், கவுரிபிதனுார் தாலுகாவின் நேரு காலனியில் வசித்தவர் கங்கண்ணா, 55. இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.
மூத்த மகன் சஞ்சய் குமார், 25, குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். தினமும் குடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து குடும்பத்தினருக்கு தொல்லை கொடுப்பது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் வீட்டுக்கு வந்த அவர், மீண்டும் மது வாங்க, தந்தையிடம் பணம் கேட்டார்.
ஏற்கனவே அதிகமாக குடித்திருந்ததால், பணம் கொடுக்க தந்தை மறுத்தார். கோபமடைந்த மகன், மரக்கட்டையால் தந்தையை தாக்கினார். பலத்த காயமடைந்த கங்கண்ணா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தந்தையை கொன்றது வெளியே தெரிந்துவிடாமல், அவசர, அவசரமாக இறுதிச் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்தார்.
இது அப்பகுதியினருக்கு, சந்தேகத்தை ஏற்படுத்தியது.
உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த கவுரிபிதனுார் போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கங்கண்ணாவின் மகள் ஸ்வாதியை விசாரித்தபோது, தந்தையை அண்ணன் கொலை செய்த அதிர்ச்சித் தகவலை தெரிவித்தார். சஞ்சய் குமாரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

