sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 கர்ப்பிணி மகள் ஆணவ கொலை கொடூர தந்தை, உறவினர்கள் கைது

/

 கர்ப்பிணி மகள் ஆணவ கொலை கொடூர தந்தை, உறவினர்கள் கைது

 கர்ப்பிணி மகள் ஆணவ கொலை கொடூர தந்தை, உறவினர்கள் கைது

 கர்ப்பிணி மகள் ஆணவ கொலை கொடூர தந்தை, உறவினர்கள் கைது


ADDED : டிச 23, 2025 06:51 AM

Google News

ADDED : டிச 23, 2025 06:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹூப்பள்ளி: வேறு ஜாதியை சேர்ந்த இளைஞரை, காதலித்து திருமணம் செய்து கொண்டதால், கர்ப்பிணி மகளை கொடூரமாக கொலை செய்த தந்தை உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

ஹூப்பள்ளி நகரின் இனாம் வீராபுரா கிராமத்தில் வசிப்பவர் விவேகானந்தா, 22. இவரும், இதே கிராமத்தில் வசித்த மான்யா, 20 என்ற பெண்ணும், ஹூப்பள்ளியில் தனியார் கல்லுாரியில் படித்தனர்; இருவரும் காதலித்தனர்.

பெற்றோர் எதிர்ப்பு இவர்களின் காதல் விவகாரம், மான்யாவின் குடும்பத்தினருக்கு தெரிந்து, கோபம் அடைந்தனர். விவேகானந்தா தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்; மான்யா உயர் சமுதாயத்தை சேர்ந்தவர். இதனால் மகளின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். விவேகானந்தாவை விட்டு விலகும்படி கூறினர். ஆனால், மான்யா மறுத்தார்.

விவேகானந்தாவிடம் உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக, மிரட்டினார். எனவே நடப்பாண்டு ஜூன் 19ல், இவரை விவேகானந்தா பதிவு திருமணம் செய்தார். பெற்றோருக்கு பயந்து, ஹாவேரியில் வசித்தனர். மான்யா ஆறு மாதம் கர்ப்பிணியாக இருந்ததால், இம்மாதம் 8ம் தேதி, இருவரும் சொந்த கிராமத்துக்கு திரும்பினர்.

அப்போது ஹூப்பள்ளி ஊரக போலீசாரிடம், பாதுகாப்பு கேட்டனர். போலீசாரும் இரு தரப்பினரையும் அழைத்து, சமாதான பேச்சு நடத்தினர். அதன்பின், விவேகானந்தா வீட்டில் வசித்தனர். ஆனால் மகளையும், அவரது கணவரையும் கொலை செய்ய, மான்யாவின் தந்தை பிரகாஷ்கவுடா பாட்டீலும், அவரது உறவினர்களும் திட்டம் தீட்டினர்.

ஆயுதங்கள் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணியளவில், விவேகானந்தாவின் வீட்டுக்குள் புகுந்து மான்யாவை, உருட்டுக்கட்டை, கடப்பாரை போன்ற ஆயுதங்களால் தாக்கினர். தடுக்க வந்த மாமியார் ரேணுகா, விவேகானந்தாவின் பெரியப்பாவையும் கொடூரமாக தாக்கினர். பலத்த காயமடைந்த இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், சிகிச்சை பலனின்றி மான்யா உயிரிழந்தார். மற்ற இருவர் சிகிச்சையில் உள்ளனர்.

மகளை கொலை செய்வதற்கு முன், கிராமத்தின் புறநகரில் பைக்கில் சென்ற விவேகானந்தாவின் தந்தை மரியப்பா தொட்டமனி, மாமா சுனிலையும் டிராக்டரால் மோதி, கொலை செய்ய முயற்சித்துள்ளனர். மனைவியை தாக்குவதை அறிந்து, அங்கு வந்த விவேகானந்தாவையும் கொலை செய்ய விரட்டி சென்றுள்ளனர்.

தகவலறிந்து கிராமத்துக்கு வந்த ஹூப்பள்ளி ஊரக போலீசார். மான்யாவின் தந்தை பிரகாஷ்கவுடா பாட்டீல் உட்பட, பலரை கைது செய்தனர். 15 பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.






      Dinamalar
      Follow us