sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இரவில் தங்கிய பெண்; மடாதிபதி வெளியேற்றம்

இரவில் தங்கிய பெண்; மடாதிபதி வெளியேற்றம்

இரவில் தங்கிய பெண்; மடாதிபதி வெளியேற்றம்


ADDED : ஜூன் 23, 2025 09:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2025 09:21 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஜயபுரா : அடவி சித்தேஸ்வர மடாதிபதி அறையில் பெண் இருந்ததால், கிராமத்தினர் நெருக்கடியால், மடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

விஜயபுரா மாவட்டம், தாளிகோட்டேவின், சிவபுரா கிராமத்தில் அடவி சித்தேஸ்வர மடம் உள்ளது. இதன் மடாதிபதியாக அடவி சித்தராம சுவாமிகள் இருந்தார். இம்மடத்திற்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.

பெண்ணொருவர், தன் மகளுடன் நேற்று முன்தினம் மடத்துக்கு வந்திருந்தார். இரவாகியும் அவர் மடத்தில் இருந்து செல்லவில்லை. இரவு 10:00 மணியளவில், மடாதிபதியின் அறைக்குள், அந்த பெண் இருந்தார். இதை பார்த்த சில இளைஞர்கள், கிராமத்தினரிடம் விஷயத்தை கூறினர்.

உடனடியாக அங்கு வந்த கிராமத்தினர், 'இந்த பெண் யார்; இரவு நேரத்தில் உங்கள் அறையில் இருப்பது ஏன்' என கேட்டனர். அப்போது மடாதிபதி, 'இரவு நேரமானதால், ஊருக்கு செல்ல முடியவில்லை. எனவே மடத்திலேயே தங்கியுள்ளார்' என பதில் அளித்தார். இதை ஏற்காத கிராமத்தின் பெரியவர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், பெண்ணையும், அவரது மகளையும் அழைத்து சென்று, மகளிர் காப்பகத்தில் விட்டனர்.

கிராமத்தினர் நேற்று கூறுகையில், 'எந்த காரணத்தை கொண்டும், அடவி சித்தராம சுவாமிகளை மடத்தில் இருக்க அனுமதிக்க மாட்டோம். அவரை வெளியேற்ற வேண்டும்' என, பிடிவாதம் பிடித்தனர். அதன்பின் மடாதிபதியை போலீசார் வெளியேற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us