/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோடரியால் தாக்கப்பட்ட சமூக நல பெண் ஊழியர் பலி; 4 பேர் கைது
/
கோடரியால் தாக்கப்பட்ட சமூக நல பெண் ஊழியர் பலி; 4 பேர் கைது
கோடரியால் தாக்கப்பட்ட சமூக நல பெண் ஊழியர் பலி; 4 பேர் கைது
கோடரியால் தாக்கப்பட்ட சமூக நல பெண் ஊழியர் பலி; 4 பேர் கைது
ADDED : நவ 15, 2025 11:05 PM

யாத்கிர்: முன்விரோதத்தில் கோடரியால் தாக்கப்பட்ட, சமூக நலத்துறை பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கூலிப்படையின் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
யாத்கிரின் ஷாகாபாத்தை சேர்ந்தவர் கிரிஷ், 40. தலித் சமூகத்தை சேர்ந்தவர். அரசு ஊழியரான இவர், ம.ஜ.த., முன்னாள் அமைச்சர் குருநாத்தின் உறவினரும் ஆவார். 2020ம் ஆண்டு முன்விரோதத்தில் கிரிஷ் கொலை செய்யப்பட்டார்.
கருணை அடிப்படையில் அவரது மனைவி அஞ்சலிக்கு, 39 அரசின் சமூக நலத்துறையில் வேலை கிடைத்தது. அந்த துறையில் இரண்டாம் நிலை உதவியாளராக வேலை செய்தார்.
கடந்த 12ம் தேதி வீட்டில் இருந்து, யாத்கிர் டவுனில் உள்ள அலுவலகத்திற்கு, அஞ்சலி காரில் சென்றார். காரை வழிமறித்த கும்பல், கார் கண்ணாடியை உடைத்தது. கோடரி, கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அஞ்சலியை கொடூரமாக தாக்கிவிட்டு தப்பியது.
உயிருக்கு போராடிய அஞ்சலி, யாத்கிர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதற்கிடையில் அஞ்சலியை தாக்கிய கூலிப்படையை சேர்ந்த யல்லப்பா, காசிநாத், தத்தாத்ரேயா, ஜெகதீஷ் ஆகிய 4 பேரை நேற்று முன்தினம் மதியம், யாத்கிர் டவுன் போலீசார் கைது செய்தனர்.
தன் கணவர் கிரிஷ் கொலையில் தொடர்புடைய, ஷாகாபாத்தின் விஜய், சங்கர் ஆகியோரை கொலை செய்ய, அஞ்சலி திட்டம் தீட்டினார்.
சில மாதங்களுக்கு முன் கூலிப்படையை ஏவி சங்கரை, அஞ்சலி தாக்கினார். உயிர் தப்பிய சங்கர், தன் கூட்டாளி விஜயுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி, அஞ்சலியை கொன்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தலைமறைவாக உள்ள சங்கர், விஜயை போலீசார் தேடுகின்றனர். தலித் சமூகத்தை சேர்ந்த, சமூக நலத்துறை பெண் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம், யாத்கிர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

