
தங்கவயல்: தங்கவயல் தாலுகா நிர்வாகம், தாலுகா பஞ்சாயத்து, நகராட்சி, கன்னட கலாசாரத் துறை ஆகியவை சார்பில் கெம்பே கவுடா ஜெயந்தி விழா நேற்று ராபர்ட்சன்பேட்டையில் கொண்டாடப்பட்டது.
நகராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் தங்கவயல் எம்.எல்.ஏ., ரூபகலா, நகராட்சி தலைவர் இந்திரா காந்தி, தாசில்தார் நாகவேணி, 'குடா' தலைவர் கோபால் ரெட்டி, இதன் ஆணையர் தர்மேந்திரா, வட்டார கல்வித் துறை அதிகாரி அனிதா, டி.எஸ்.பி., பாண்டுரங்கா, வக்கீல்கள் சங்கத் தலைவர் ராஜகோபால் கவுடா உட்பட பலர் பங்கேற்றனர்.
பெங்களூரை உருவாக்கிய கெம்பே கவுடாவின் பெருமையை குறித்து பலரும் புகழ்ந்து பேசினர்.
நகராட்சி மைதானம் அருகில் அலங்கரிக்கப்பட்ட தேரில் கெம்பே கவுடா வைக்கப்பட்டு, ஊர்வலம் நடைபெற்றது.
கன்னட சங்கத்தினர், ஒக்கலிகர் சங்கத்தினர், நகராட்சி கவுன்சிலர்கள், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.