/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஊழலில் திளைக்கும் அதிகாரிகள் முதல்வருக்கு நிதி ஆலோசகர் கடிதம்
/
ஊழலில் திளைக்கும் அதிகாரிகள் முதல்வருக்கு நிதி ஆலோசகர் கடிதம்
ஊழலில் திளைக்கும் அதிகாரிகள் முதல்வருக்கு நிதி ஆலோசகர் கடிதம்
ஊழலில் திளைக்கும் அதிகாரிகள் முதல்வருக்கு நிதி ஆலோசகர் கடிதம்
ADDED : அக் 21, 2025 04:17 AM

பெங்களூரு: 'கொப்பாலின் சுரங்கம், நில ஆய்வியல் துறையில் பெருமளவில் ஊழல் நடக்கிறது. உடனடியாக அதிகாரிகளை இடமாற்ற வேண்டும்' என முதல்வரின் நிதி ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி வலியுறுத்தினார்.
இது குறித்து, முதல்வர் சித்தராமையாவுக்கு, பசவராஜ் ராயரெட்டி எழுதிய கடிதம்:
கொப்பால் மாவட்டத்தில் சட்டவிரோத சுரங்கத்தொழில் அதிகம் நடக்கிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும். துங்கபத்ரா ஆறு, ஹிரேஹள்ளா ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளுகின்றனர்.
மணல் கடத்தல் பற்றி தொடர்ந்து செய்தி வெளியாகிறது. பூதகும்பா, கெரேஹள்ளி, பண்டி ஹர்லாபுரா பகுதியில், சட்டவிரோதமாக கிரானைட் தொழில் நடக்கிறது.
இது குறித்து, புகார் வந்ததால் சுரங்கம், நில ஆய்வியல் துறை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்து, அறிக்கை அளித்துள்ளனர்.
குகநுார் தாலுகா, இளகல் கிராமத்தில் 9.4 ஏக்கர் பென்னகெரே ஏரியில் மண் அள்ளப்பட்டது.
முதலில் இந்த மண்ணை விற்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர்; அதன்பின் விற்க வேண்டாம் என உத்தரவிட்டனர். இதன் மூலம் ஊழலுக்கு வழி வகுத்துள்ளனர்.
கொப்பால் மாவட்ட சுரங்கம், நில ஆய்வியல் துறையில் சில அதிகாரிகள், பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் உள்ளனர். நவீன்குமார் 18 ஆண்டு, மல்லிகார்ஜுன் ஒன்பது ஆண்டு, ஹரிஷ் 18 ஆண்டு, திரிவேணி பசவராஜ் ஒன்பது ஆண்டுகள் என முகாமிட்டுள்ளனர்.
இது போன்று பலர் உள்ளனர். இவர்கள் ஊழலில் திளைத்து உள்ளனர். இவர்களை உடனடியாக இடமாற்ற வேண்டும்.
கொப்பாலில் 85 கி.மீ., துாரம் துங்கபத்ரா ஆறு பாய்கிறது. இங்கு பெருமளவில் மணல் உள்ளது. இங்கிருந்து தினமும் 100 முதல் 150 டிரிப்புகளில் மணல், சட்டவிரோதமாக அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது.
இதனால் கர்நாடக அரசுக்கு, கோடிக்கணக்கான ரூபாய் வரி இழப்பு ஏற்படுகிறது. இந்த முறைகேட்டில், சுரங்கம், நிலை ஆய்வியல் துறை அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதாக, புகார் வந்துள்ளது. இதனால் மாநில அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.
மாவட்ட கலெக்டர் தலைமையில், செயற்படை அமைத்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட அறிவு இல்லாமல், சில அதிகாரிகள் மணல் மாபியாவினருடன் கைகோர்த்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.