தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற மீனவருக்கு அறிவுரை

பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற மீனவருக்கு அறிவுரை

பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற மீனவருக்கு அறிவுரை


UPDATED : நவ 14, 2026 12:00 AM

ADDED : நவ 13, 2026 07:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 12:00 AM ADDED : நவ 13, 2026 07:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்தர கன்னடா: மீன்பிடி படகுகளின், மீன் சேகரிப்பு அறையை சுத்தம் செய்யும் போது, ஐந்து மீனவர்கள் இறந்த பின், மாநில அரசு பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை அறிவித்துள்ளது.

கடந்த, 27ல், உத்தர கன்னடா மாவட்டம், கோகர்ணாவின், ததடி துறைமுகத்தில் மீன்பிடி படகின் கீழ் பகுதியில் உள்ள, மீன்கள் சேகரிப்பு அறையை சுத்தம் செய்ய சென்ற மூன்று மீனவர்கள், விஷ வாயு தாக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

அக்டோபர் 31ல் கார்வாரின், முதுகா துறைமுகத்தில் மீன்பிடி படகின் மீன் சேகரிப்பு அறையை சுத்தம் செய்த போது, இரண்டு மீனவர்கள் மூச்சுத்திணறி இறந்தனர்.

அடுத்தடுத்து இரண்டு அசம்பாவிதங்களில், ஐந்து மீனவர்கள் பலியான பின், கர்நாடக மீன் வளத்துறை எச்சரிக்கை அடைந்துள்ளது. மீன்கள் அழுகியது, அமோனியா – ஹைட்ரஜன் சல்பைடு போன்ற அபாயகரமான விஷவாயு மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால், மீனவர்கள் இறந்தது விசாரணையில் தெரிந்தது.

இதை கட்டுப்படுத்தும் நோக்கில், மீன்வளத்துறை, போலீஸ் மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகள், ஆலோசனை நடத்தி பாதுகாப்பு விதிமுறைகள் அறிவித்துள்ளனர்.

அதன்படி, இனி படகுகளின் மீன் சேகரிப்பு அறைக்குள் செல்வதற்கு முன், கட்டாயமாக காஸ் டிடெக்டர் பயன்படுத்தி, விஷ வாயுவை பரிசோதிக்க வேண்டும். காற்று வசதி இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என, உத்தரவிட்டுள்ளனர்.

மீன் சேகரிப்பு அறையில், வாடை குறைவாக உள்ளது என கருதி, யாரும் நேரடியாக அறைக்குள் செல்ல கூடாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us