தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மண்ணுளி பாம்புகள் விற்க முயன்ற ஐவர் கைது

 மண்ணுளி பாம்புகள் விற்க முயன்ற ஐவர் கைது

 மண்ணுளி பாம்புகள் விற்க முயன்ற ஐவர் கைது


ADDED : மே 12, 2026 11:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2026 11:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிக்கமகளூரு: மண்ணுளி பாம்புகளை விற்பனை செய்ய முயன்ற, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

சிக்கமகளூரு வாஜ்பாய் லே - அவுட் பகுதியில் மண்ணுளி பாம்புகளை விற்க சிலர் முயற்சிப்பதாக வன அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் படி, மாவட்ட வனத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, மண்ணுளி பாம்பு விற்பனை செய்ய முயன்றவர்கள் வனத்துறையினரிடம் சிக்கினர்.

அதிகாரிகளை பார்த்ததும், பாம்பு விற்பனை செய்ய முயன்றவர்கள் காரில் தப்பிக்க முயன்றனர். அவர்களை வனத்துறையினர் துரத்தி பிடித்தனர்.

அவர்கள், ஆந்திராவை சேர்ந்த வம்சிகிருஷ்ணா, ஆரிப் பாஷா, யதீஷ், துமகூரை சேர்ந்த ஷாபி, ஆரிப் ஆகியோர். இவர்கள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து இரண்டு மண்ணுளி பாம்புகள் மீட்கப்பட்டன. அவர்கள் பயன்படுத்திய கார், ஐந்து மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இரண்டு மண்ணுளி பாம்புகளை, ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us