sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ ஹாசனில் மிதக்கும் தேவாலயம்

 ஹாசனில் மிதக்கும் தேவாலயம்

 ஹாசனில் மிதக்கும் தேவாலயம்


ADDED : மே 06, 2026 11:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2026 11:46 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

ஹாசன் என்றால் அனைவருக்கும் ஹலேபீடு போன்ற ஹிந்து கோவில்கள் நினை வுக்கு வரும். இம்மாவட்டத்தில் மிதக்கும் தேவாலயம் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். ஹா சன் மாவட்டம் ஷெட் டிஹள்ளி கிராமத்தில் இருந்து இரண்டு கி.மீ., துாரத்தில் ஹேமாவதி அணையின் உட்புறத்தில் அமைந்து உள்ள து 'ரோசரி தேவாலயம்'.

முட்டை ஓடுகள் ரோமன் கத்தோலிக்கரான மதபோதகர் துபோய், புதுச்சேரிக்கு வந்திருந்தார். அப்போது ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த ஸ்ரீரங்கப்பட்டணாவுக்கு வரும்படி 1799ல் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இங்கு வந்த அவர், இப்பகுதி மக்களுடன் இணைந்து வாழ்ந்தார். இப்பகுதியில் தேவாலயம் கட்ட விரும்பினார்.

பலரது உதவியுடன், 1860ல் சாதாரண செங்கற்கள், பெல்ஜியத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கண்ணாடி, எகிப்து ஜி ப்சம், வெல்லம், முட்டை ஓடுகளை கட்டுமான பொருட்களாக பயன்படுத்தி தேவாலயம் கட்டினார்.

சுதந்திரத்துக்கு பின், ஹேமாவதி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அப்போதைய அரசு தீர்மானித்தது. இப்பகுதியில் இருந்த 28 கிராம மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஹேமாவதி ஆற்றின் குறுக்கே, 1960ல் அணை கட்ட துவங்கி, 1979ல் திறக்கப்பட்டது.

பெரும்பகுதி ஒவ்வொரு ஆண்டும் மழை காலமான ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், தேவாலயத்தின் பெரும்பகுதி, நீரில் மூழ்கிவிடும். அப்போது பரிசலில் அருகில் சென்று பார்க்கலாம். டிசம்பர் முதல் மே மாதம் வரையிலான காலத்தில் அணையில் நீர்வரத்து குறையும்போது, முழு தேவாலயத்தையும், கரையில் இருந்து நடந்தே சென்று பார்க்கலாம்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தேவாலயம் நீரில் மூழ்குவதால், தேவாலயத்தின் மேல்கூரை, சுவர்கள் இடிந்து, எலும்புக்கூடு போன்று காட்சி அளிக்கிறது. இதனால் இதனை 'மிதக் கும் தேவாலயம்' அல்லது 'நீரில் மூழ்கிய தேவாலயம்' என்று அழைக்கின்றனர்.

மழை காலத்தில் நீரில் மூழ்கிய 'ரோசரி தேவாலயம்.' அடுத்த படம்: கோடை காலத்தில் நீர் வற்றி எலும்புக்கூடாக காட்சி அளிக்கும் தேவாலயம். கோப்பு படங்கள்.

எப்படி செல்வது?

 விமானத்தில் செல்வோர் மைசூரு விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ், டாக்சியில் 130 கி.மீ., பயணித்து, ஹாசன் ஷெட்டிஹள்ளி செல்ல வேண்டும்.

 ரயிலில் செல்வோர், ஹாசன் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ், டாக்சியில் 40 கி.மீ., தொலைவில் உள்ள ஷெட்டிஹள்ளி செல்லலாம்.

 பஸ்சில் செல்வோர், ஹாசன் நகர பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பஸ், டாக்சியில் 40 கி.மீ., தொலைவில் உள்ள ஷெட்டிஹள்ளிக்கு செல்ல முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us