/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இளம்பெண்ணுக்கு தொல்லை உணவு விற்பனை பிரதிநிதி கைது
/
இளம்பெண்ணுக்கு தொல்லை உணவு விற்பனை பிரதிநிதி கைது
ADDED : செப் 04, 2025 11:15 PM

சுத்தகுண்டேபாளையா: பி.ஜி., எனும் தங்கும் விடுதிக்குள் புகுந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, உணவு விற்பனை பிரதிநிதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு, சுத்தகுண்டேபாளையாவில் பெண்களுக்கான பி.ஜி., உள்ளது. கடந்த 29 ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு, பி.ஜி.,க்குள் புகுந்த மர்மநபர் ஒருவர், பெண்கள் தங்கியிருந்த அறைக்குள் சென்றார். ஒரு அறையில் தனியாக துாங்கிக் கொண்டிருந்த 25 வயது இளம்பெண்ணுக்கு, பாலியல் தொல்லை கொடுத்தார்.
விழித்த இளம்பெண் கூச்சலிட்டபோது, அவரை தாக்கிவிட்டு அறையில் இருந்து 2,500 ரூபாயை கொள்ளையடித்துவிட்டு தப்பினார். இளம்பெண் அளித்த புகாரில், சுத்தகுண்டேபாளையா போலீசார் விசாரித்தனர்.
தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை, இளம்பெண் விரட்டிச் சென்று தாக்கியது, பி.ஜி.யில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் அடிப்படையில், போலீசார் விசாரித்தனர். இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, ஆந்திராவின் மதனப்பள்ளியை சேர்ந்த நரேஷ் பட்டியம், 37, என்பது தெரிந்தது. நேற்று முன்தினம் இரவு அவர் கைது செய்யப்பட்டார்.
எலக்ட்ரானிக் சிட்டியில் மனைவி, பிள்ளைகளுடன் வசிக்கும் நரேஷ் பட்டியம், தனியார் உணவு விற்பனை நிறுவனத்தில் பிரதிநிதியாக வேலை செய்கிறார். பைக் டாக்ஸியும் ஓட்டுகிறார். பண தேவைக்காக திருடியும் வந்துள்ளார்.
ஆந்திராவில் இவர் மீது 2 திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. பி.ஜி.,க்குள் திருட வந்த அவர், இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் விசாரணையில் தெரிந்து உள்ளது.