/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புலி தாக்கியதில் வன ஊழியர் பலி
/
புலி தாக்கியதில் வன ஊழியர் பலி
ADDED : டிச 28, 2025 05:07 AM
சாம்ராஜ்நகர்: வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வன ஊழியர், புலி தாக்கியதில் பலியானார்.
சாம்ராஜ்நகரில் புலிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குண்டுலுபேட் மட்டுமின்றி, சாம்ராஜ்நகர், ஹனுார் தாலுகாக்களிலும் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். சமீபத்தில் குண்டுலுபேட்டின் டெபாபூர் கிராமத்தில் வனத்துறையினர் அமைத்த கூண்டில் புலி ஒன்று சிக்கியது.
இந்நிலையில், பண்டிப்பூர் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மாரஹல்லா முகாமில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் சனா ஹைதர் 56. இவருடன் மேலும் மூவர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நான்கு பேரும், விலங்குகள் மற்றும் வேட்டைக்காரர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கின்றனர்.
நேற்று மதியம் சனா ஹைதர் உட்பட நான்கு ஊழியர்களும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதரில் மறைந்திருந்த ஒரு புலி, சனா ஹைதர் மீது பாய்ந்து கடித்து குதறியது. உடனிருந்த மற்றவர்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டதால், புலி தப்பியோடியது. ரத்தம் அதிகளவில் வெளியேறியதால், சனா ஹைதர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பண்டிப்பூர் புலிகள் காப்பக அதிகாரி பிரபாகரன், சம்பவ இடத்தை ஆய்வு செய்தார்.

