sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நிலத்தை வகைப்பாடு மாற்றம் செய்யாமல் விற்ற பா.ஜ., 'மாஜி' எம்.எல்.சி.,க்கு சிறை

 நிலத்தை வகைப்பாடு மாற்றம் செய்யாமல் விற்ற பா.ஜ., 'மாஜி' எம்.எல்.சி.,க்கு சிறை

 நிலத்தை வகைப்பாடு மாற்றம் செய்யாமல் விற்ற பா.ஜ., 'மாஜி' எம்.எல்.சி.,க்கு சிறை


ADDED : ஜன 31, 2026 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 05:19 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: விவசாயிகளிடம் இருந்து வாங்கிய நிலத்தை, வகைப்பாடு மாற்றம் செய்யாமல் சட்டவிரோதமாக மனைகளாக்கி விற்ற, பா.ஜ., முன்னாள் எம்.எல்.சி., அஸ்வத் நாராயணாவுக்கு, ஓராண்டு சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, கர்நாடக நில அபகரிப்பு தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பெங்களூரு தெற்கு தாலுகாவின் கெங்கேரி பேரூராட்சிக்கு உட்பட்ட ராமசந்திரா கிராமத்தில் சர்வே எண் 100/2ல் பா.ஜ., முன்னாள் எம்.எல்.சி., அஸ்வத் நாராயணா, விவசாயிகளிடம் இருந்து 4.30 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கினார். விவசாய நிலத்தை, வர்த்தக நிலமாக பரிமாற்றம் செய்யாமல், இதில் லே - அவுட் அமைத்தார். இதற்கு சம்பந்தப்பட்ட ஆணையத்தில் அனுமதி பெறாமல், மனைகளாக்கி பலருக்கு விற்பனை செய்தார்.

சிலருக்கு விற்கப்பட்ட மனை, நிர்ணயித்த பரப்பளவு இல்லாமல், குறைவாக இருந்தது. மைசூரை சேர்ந்த டாக்டர் காவ்யாஸ்ரீ வாங்கிய மனையின் அளவும், குறைவாக இருந்தது. இது குறித்து, அவர் கர்நாடக நில அபகரிப்பு தடுப்பு நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

நீதிமன்ற விசாரணையில், அஸ்வத் நாராயணா விவசாய நிலத்தை வகைப்பாடு மாற்றம் செய்யாமல், லே - அவுட் அமைத்ததும், அறிவித்ததற்கு பதிலாக குறைந்த பரப்பளவு மனைகளை விற்றதும் உறுதியானது. எனவே இவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து, நேற்று முன் தினம் தீர்ப்பளித்தது. காவ்யாஸ்ரீக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us