/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அண்டை வீட்டில் ரூ.15 லட்சம் கொள்ளை மத்துார் நகராட்சி 'மாஜி' தலைவர் கைது
/
அண்டை வீட்டில் ரூ.15 லட்சம் கொள்ளை மத்துார் நகராட்சி 'மாஜி' தலைவர் கைது
அண்டை வீட்டில் ரூ.15 லட்சம் கொள்ளை மத்துார் நகராட்சி 'மாஜி' தலைவர் கைது
அண்டை வீட்டில் ரூ.15 லட்சம் கொள்ளை மத்துார் நகராட்சி 'மாஜி' தலைவர் கைது
ADDED : நவ 24, 2025 03:35 AM

மாண்டியா: பக்கத்து வீட்டின் பூட்டை உடைத்து, 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்த, மத்துார் நகராட்சி முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டார்.
மாண்டியா மாவட்டம், மத்துார் நகரின் தொட்டிபேடியில் இன்டேன் காஸ் ஏஜென்சி வைத்திருப்பவர் சந்திரசேகர். இவரது மனைவி சுசீலம்மா. இதே பகுதியில் தம்பதி வசித்து வருகின்றனர்.
ஆக., 26ம் தேதி சந்திரசேகர் அலுவலகம் சென்றிருந்தார். அன்று மாலையில், சந்திரசேகர் வீட்டிற்கு வந்த மர்ம நபர், வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினார்.
கதவை திறந்த சுசீலம்மாவின் வாயை பொத்தி, கத்தியை காண்பித்து மிரட்டி, அவரை உள்ளே தள்ளி சென்றார். அவரின் கை, கால்களை கட்டி போட்டு, வீட்டில் இருந்த 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றார்.
பணி முடிந்து வீட்டுக்கு வந்த சந்திரசேகர், மனைவியின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மத்துார் போலீசில் புகார் செய்தனர்.
இதற்கிடையில், மத்துார் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இரு தரப்பினர் இடையே கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து இப்போலீஸ் நிலைய அதிகாரிகள், ஏட்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனால் பல வழக்குகள் விசாரணை நிலுவையில் இருந்தது.
சமீபத்தில் இந்த போலீஸ் நிலையத்துக்கு இன்ஸ்பெக்டர் நவீன் நியமிக்கப்பட்டார். இந்த போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் திருட்டு வழக்குகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது சுசீலம்மாவின் வழக்கு குறித்து விசாரணையை துவக்கினார். வீட்டின் நுழைவு வாயிலில் இருந்த கண்காணிப்பு கேமராவையும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். நவ., 21 ம் தேதி சுசீலம்மாவின் அண்டை வீட்டை சேர்ந்த மத்துார் நகராட்சி முன்னாள் தலைவர் மரிகவுடாவிடம் விசாரித்தனர்.
தொடர் விசாரணையில், நகைகளை திருடியதை அவர் ஒப்புக் கொண்டார். திருடிய நகைகளை மலவள்ளி, மத்துாரில் வங்கி லாக்கரில் வைத்திருந்தார். அதை போலீசார் மீட்டனர். மரிகவுடாவை கைது செய்து, விசாரிக்கின்றனர்.

