முன்னாள் எம்.எல்.ஏ., மகன் கொலை: கள்ளக்காதலி உட்பட மூவரிடம் விசாரணை
முன்னாள் எம்.எல்.ஏ., மகன் கொலை: கள்ளக்காதலி உட்பட மூவரிடம் விசாரணை
ADDED : மார் 26, 2026 12:52 AM

தார்வாட்: முன்னாள் எம்.எல்.ஏ., பாபுராவ் போல்ஷெட்டி மகன் கொலை வழக்கில், கள்ளக்காதலி உட்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பெலகாவியின் பைலஹொங்கல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., பாபுராவ் போல்ஷெட்டி. இவரது மகன் ராஜு போல்ஷெட்டி, 53. ரியல் எஸ்டேட் தொழில் செய்தார். நேற்று முன்தினம் தார்வாட் தாலுகா, ராமபுரா கிராமத்தில் உள்ள வனப்பகுதியில், காருக்குள் எரிந்த நிலையில் ராஜு உடல் கண்டெடுக்கப்பட்டது.
ராஜுவை கொலை செய்து உடலை எடுத்து வந்து, காருக்குள் தீ வைத்தது தெரிந்தது. அவரது மொபைல் போன் நம்பர் மூலம் அடிக்கடி யார், யாரிடம் பேசினார் என்று, தார்வாட் ரூரல் போலீசார் விசாரித்தனர்.
ராஜுவுக்கும் , 45 வயது பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரிந்தது. அந்த பெண் கேட்கும் போது எல்லாம் ராஜு பணம் கொடுத்து உள்ளார். சில நாட்களுக்கு முன்பு கள்ளக்காதலிக்கும், ராஜுவுக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டது. தான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி ராஜு கேட்டு உள்ளார்.
இதனால் ஏற்பட்ட தகராறில், கள்ளக்காதலி உட்பட 3 பேர் சேர்ந்து ராஜுவை கொன்று இருக்கலாம் என்று, போலீசாருக்கு சந்தேகம் எழுந்து உள்ளது. மூன்று பேரிடமும் விசாரணை நடத்துகின்றனர்.
