தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஈ.டி., விசாரணைக்கு பயந்து 'மாஜி' அதிகாரி தற்கொலை 

 ஈ.டி., விசாரணைக்கு பயந்து 'மாஜி' அதிகாரி தற்கொலை 

 ஈ.டி., விசாரணைக்கு பயந்து 'மாஜி' அதிகாரி தற்கொலை 


ADDED : பிப் 26, 2026 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 06:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோரமங்களா: அமலாக்கத்துறை விசா ரணைக்கு பயந்து, பெங்களூரு மாநகராட்சி முன்னாள் தலைமை இன்ஜினியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜி.பி.ஏ., எனும் கி ரேட்டர் பெங்களூரு ஆணையம், முன்பு, பெங்களூரு மாநகராட்சியாக இருந்தது. மஹாதேவபுரா மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் தலைமை இன்ஜினியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பரமேஸ்வரய்யா, 65. பெங்களூரு கோரமங்களாவில் குடும்பத்துடன் வசித்தார்.

கடந்த 2021ம் ஆண்டு கான்ட்ராக்டர் அனில் என்பவரின் வீட்டில், வருமான வரி துறையினர் சோதனை நடத்திய போது, சூட்கேஸ் சிக்கியது. அதில் மூன்று லாக்கர் சாவிகள், 1.35 லட்சம் ரூபாய் ரொக்கம், 275 கிராம் தங்கநகை, சொத்து ஆவணங்கள் இருந்தன. அனிலிடம் விசாரித்த போது அவை அனைத்தும் பரமேஸ்வரய்யாவுக்கு உரியது என்று கூறினார்.

இதையடுத்து, அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. வங்கி லாக்கர்களை திறந்து, 86.35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர். கடந்த 2012ல் பரமேஸ்வரய்யாவின் சொத்து மதிப்பு 29.64 லட்சமாக இருந்தது. ஆனால் 2021ல் 5.85 கோடி ரூபாயாக இருந்தது. அவர் வருமானத்திற்கு அதிக சொத்து சேர்த்ததுடன், வீட்டுமனைகள் வாங்கியதும் தெரிந்தது. அவர் ஊழல் செய்ததும் தெரிந்தது.

பரமேஸ்வரய்யா சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று, வருமான வரி அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், ஈ.டி., எனும் அமலாக்கத்துறைக்கும் தகவல் கொடுத்தனர். கடந்த மாதம் பரமேஸ்வரய்யா வீட்டில் ஈ.டி., அதிகாரிகள் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். பிப்ரவரி 25ம் தேதி (நேற்று) விசாரணைக்கு ஆஜராகவும் அவருக்கு சம்மன் அனுப்பினர்.

ஈ.டி., அதிகாரிகள் வீட்டில் சோதனை நடத்தியதில் இருந்தே, மன உளைச்சலுக்கு ஆளான பரமேஸ்வரய்யா, அதற்கு சிகிச்சையும் எடுத்து உள்ளார். நேற்று அவர் விசாரணைக்கு ஆஜராகி வேண்டும்.

ஆனால், நேற்று காலை அவரது அறை கதவு திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அவர் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. முதற்கட்ட விசாரணையில் ஈ.டி., விசாரணைக்கு பயந்து உயிரை மாய்த்தது தெரிந்தது. வேறு காரணம் உள்ளதா என்றும் கோரமங்களா போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us