/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஒக்கலிகர் சங்க 'மாஜி' தலைவர் காங்., மேலிடத்துக்கு எச்சரிக்கை
/
ஒக்கலிகர் சங்க 'மாஜி' தலைவர் காங்., மேலிடத்துக்கு எச்சரிக்கை
ஒக்கலிகர் சங்க 'மாஜி' தலைவர் காங்., மேலிடத்துக்கு எச்சரிக்கை
ஒக்கலிகர் சங்க 'மாஜி' தலைவர் காங்., மேலிடத்துக்கு எச்சரிக்கை
ADDED : நவ 28, 2025 05:34 AM
பெங்களூரு: ''கொடுத்த வாக்குறுதியின்படி, சிவகுமாரை முதல்வராக்க வேண்டும். இல்லையெனில் அடுத்த தேர்தலில் காங்கிரசுக்கு பாடம் புகட்டுவோம்,'' என மாநில ஒக்கலிகர் சங்க முன்னாள் தலைவர் கெஞ்சப்பா கவுடா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சிவகுமார் முதல்வராவார் என்பதற்காகவே, ஒக்கலிகர்கள், காங்கிரசுக்கு ஓட்டு போட்டோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வர, சிவகுமார் கடுமையாக உழைத்து உள்ளார். அவருக்கு கொடுத்த வாக்கின்படி முதல்வராக்க வேண்டும். இல்லையெனில், அடுத்த தேர்தலில் காங்கிரசுக்கு பாடம் புகட்டுவோம்.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவர் தான், முதல்வராக வருவார். ஆனால், சித்தராமையா முதல்வராக்கப்பட்டு உள்ளார். ஆரம்பத்தில் நாங்களும் மகிழ்ச்சியாக தான் இருந்தோம். ராகுல், சோனியா, கார்கே ஆகியோர் பதவி பங்கீடு குறித்து கொடுத்த வாக்குறுதியின்படி பதவி வழங்க வேண்டும்.
நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், நிர்மலானந்தநாத சுவாமிகளும் கூட, சிவகுமாருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அவர் ஏன் இந்த வார்த்தையை கூற வேண்டும். சிவகுமாருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாதது.
சித்தராமையாவுக்கு தேவையான வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மற்ற சமுதாயத்தினருக்கு அநீதி ஏற்பட்டால், மடாதிபதிகள் அமைதியாக இருக்க வேண்டுமா? கட்சிக்கு விசுவாசத்தை காட்டிய அவருக்கு உரிய பதவி வழங்குவதை கட்சி மேலிடம் தீர்மானிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

