/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., கூட்டணி கிடையாது முன்னாள் பிரதமர் தேவகவுடா அறிவிப்பு
/
உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., கூட்டணி கிடையாது முன்னாள் பிரதமர் தேவகவுடா அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., கூட்டணி கிடையாது முன்னாள் பிரதமர் தேவகவுடா அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., கூட்டணி கிடையாது முன்னாள் பிரதமர் தேவகவுடா அறிவிப்பு
ADDED : டிச 27, 2025 06:33 AM

பெங்களூரு: ''லோக்சபா, சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி நீடிக்கும். ஆனால், உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி வைப்பது கஷ்டம்,'' என, ம.ஜ.த., தேசிய தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
லோக்சபா, சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுடன் எங்களின் கூட்டணி நீடிக்கும். மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து மற்றும் நகர உள்ளாட்சி தேர்தல்களில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பது கஷ்டம். எங்கள் கட்சிக்கு பலம் உள்ள இடங்களில், நாங்கள் தனித்து போட்டியிடுவோம்.
ஓராண்டு ஆலோசனை உள்ளாட்சிகளில் கூட்டணி தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசிக்க முடியுமா. இதுகுறித்து, மாநில பா.ஜ., தலைவர் ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளார்.
ஜனவரி 25ல், மைசூரில் அஹிந்தா மாநாடு நடத்த, முதல்வர் சித்தராமையா திட்டமிட்டுள்ளாராம். எதன் அடிப்படையில் அவர் அஹிந்தா மாநாடு நடத்தவுள்ளார்.
சித்தராமையா அஹிந்தா தலைவர் என்றால், ஒரு தொகுதியை தேர்வு செய்து கொள்ள ஓராண்டு ஆலோசித்தது ஏன்? மைசூரு, பாதாமி, கோலார் தொகுதியில் களமிறங்குவது குறித்து ஓராண்டு ஆலோசித்தது ஏன்? அவர் அஹிந்தா தலைவர் என்றால், மாநிலத்தின் எந்த தொகுதியிலாவது நின்று வெற்றி பெற்றிருக்கலாமே.
முந்தைய தேர்தலில், சித்தராமையாவுக்கு அவரது மகன் தொகுதியை விட்டுத்தர வேண்டியிருந்தது. என்னை பற்றி சித்தராமையா மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். அவரது மூத்த மகன் காலமான போது. ஆறுதல் கூற அவரது வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது அவர், 'இந்த வயதிலும் எவ்வளவு உழைக்கிறீர்கள்' என்றார். அவரை போன்ற தலைவர்கள், ம.ஜ.த.,வை விட்டு சென்ற பின், கட்சியை காப்பாற்ற உழைக்கிறேன்.
இப்போது தன் இளைய மகனை, அவர் அரசியலுக்கு அழைத்து வந்துள்ளார். உள் இடஒதுக்கீட்டில், எந்தெந்த ஜாதிக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு அளித்தனர் என்பதை, 16 பட்ஜெட்களை தாக்கல் செய்த சித்தராமையா கூற வேண்டும்.
நாட்டில் நகர உள்ளாட்சிகளில், பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தது யார்; முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது யார்?
கூட்டம் கேரளாவில் இடதுசாரி கட்சிகளுடன், ம.ஜ.த., கூட்டணி வைத்து கொள்ளும். ஜனவரி, 18ல் பெங்களூரிலும், 23ல் ஹாசனிலும், 24ல் பாகல்கோட்டிலும் ம.ஜ.த., தொண்டர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துவோம்.
நாட்டின் சில மாநிலங்களில், தேவாலயங்கள் மீது தாக்குதல் நடப்பது கண்டிக்கத்தக்கது. தேவாலயம் மீது தாக்குதல் நடந்திருக்கக் கூடாது. இத்தகைய செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி, கிறிஸ்துமஸ் தினத்தன்று, டில்லியில் தேவாலயத்துக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார். தேவாலயம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.

