/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜார்கண்ட் மாநிலத்தவரை தாக்கிய நான்கு பேர் கைது
/
ஜார்கண்ட் மாநிலத்தவரை தாக்கிய நான்கு பேர் கைது
ADDED : ஜன 14, 2026 03:17 AM
தட்சிண கன்னடா: மங்களூரில் தங்கி பணியாற்றி வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவரை, வங்கதேசத்தவர் எனக்கூறி தாக்கிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி தில்ஜன் அன்சாரி. கடந்த, 15 ஆண்டுகளாக, ஆறு மாதத்துக்கு ஒரு முறை, தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரில் தங்கி கூலி வே லை செய்து வந்தார்.
கடந்த, 11ம் தேதி மாலையில் பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காவூர் அருகே நடந்து சென்ற போது, அவரை நான்கு பேர் வழிம றித்தனர்.
அன்சாரியை வங்கதேசத்தைச் சேர்ந்தவன் தானே என்று கேட்டனர். அதற்கு அவர், நான் இந்தியன் தான்... ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவன் என்று பதிலளித்துள்ளார். அதை நம்பாத நான்கு பேரும், அன்சாரியை திட்டி, சரமாரியாக தாக்கியுள்ளனர். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், அன்சாரியை காப்பாற்ற ஓடி வந்தார்.
இதை பார்த்த நால்வரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். தலையில் காயம் ஏற்பட்ட அன்சாரி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து காவூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நகர போலீஸ் கமிஷனர் சுதீர் குமார் ரெட்டி கூறுகையில், ''அன்சாரி, இந்தியாவை சேர்ந்தவர் என்பதை போலீசார் உறுதிபடுத்தி உள்ளனர்.
''அவரை தாக்கிய காவூரை சேர்ந்த சாகர், 24, தனுஷ், 24, ரதிஷ் தாஸ், 32, மோகன், 33, ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் பின்னணி குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.

