/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நகையை திருடி திருமண நிச்சயம் வாலிபரை கொன்ற நால்வர் கைது
/
நகையை திருடி திருமண நிச்சயம் வாலிபரை கொன்ற நால்வர் கைது
நகையை திருடி திருமண நிச்சயம் வாலிபரை கொன்ற நால்வர் கைது
நகையை திருடி திருமண நிச்சயம் வாலிபரை கொன்ற நால்வர் கைது
ADDED : ஜூன் 02, 2025 11:10 PM

மைசூரு: தங்க நகையைத் திருடி ஆடம்பரமாக திருமண நிச்சயதார்த்தம் செய்த வாலிபரை கொலை செய்த நால்வர் கைது செய்யப்பட்டனர்.
மைசூரு நகரின் குமசனஹள்ளி கிராமத்தின் அருகில், ஏப்ரல் 18ம் தேதியன்று எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் கிடந்தது. இதை பார்த்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற ஜெயபுரா போலீசார், சடலத்தை மீட்டு விசாரணையை துவக்கினர்.
விசாரணையில் அந்நபர் மோகன் குமார், 31, என்பது தெரிந்தது. சாம்ராஜ்நகரின் பேடரபுரா கிராமத்தைச் சேர்ந்த இவர் மைசூரின், போகாதியில் லாட்ஜ் ஒன்றில் மேலாளராக பணியாற்றினார். இந்த லாட்ஜுக்கு, சீட்டாட வந்த சீனிவாஸ் என்பவர், அவருக்கு அறிமுகமானார்.
நடப்பாண்டு ஏப்ரலில், சீட்டாட பணம் இல்லாததால், தன் மனைவியின் 60 கிராம் தங்கச்செயினை அடமானம் வைக்க சீனிவாஸ் கொண்டு வந்தார். அன்றைய தினம் பவுர்ணமி என்பதால், அடகுக்கடை மார்வாடி, நகையை அடகு வாங்க முடியாது என, மறுத்துவிட்டார்.
எனவே தங்க நகையுடன் லாட்ஜுக்கு வந்த சீனிவாஸ், தான் தங்கியிருந்த அறையில் தலையணைக்கு கீழே வைத்திருந்தார். இதை பார்த்த மோகன் குமார், தங்கச்செயினை திருடினார்.
இதை தன் சொந்த கிராமம் பேடரபுராவுக்கு கொண்டு சென்று, அடமானம் வைத்தார். அந்த பணத்தை வைத்து, ஆடம்பரமாக திருமண நிச்சயம் செய்து கொண்டார்.
தன் செயினை திருடியது மோகன்குமார் என்பதை தெரிந்து கொண்ட சீனிவாஸ், பேச வேண்டும் என கூறி வீட்டில் இருந்த மோகன் குமாரை ஏப்ரல் 17ம் தேதி வரவழைத்து, காரில் அழைத்துச் சென்றார்.
தன் நண்பர்களுடன் சேர்ந்து அவரை அடித்து, கழுத்தை நெரித்து கொலை செய்தார். அதன்பின் குமசனஹள்ளியில் உடலை எரித்து விட்டு தப்பியது, விசாரணையில் தெரிந்தது.
கொலை தொடர்பாக பிரஜ்வல், சந்துரு, கபீர் காளய்யா, தர்ஷன் ஆகிய மூவரும் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டனர். சீனிவாஸ் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடுகின்றனர்.