தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பணத்தகராறில் நண்பரை கொன்ற நால்வர் கைது

பணத்தகராறில் நண்பரை கொன்ற நால்வர் கைது

பணத்தகராறில் நண்பரை கொன்ற நால்வர் கைது


UPDATED : நவ 27, 2026 12:00 AM

ADDED : நவ 26, 2026 10:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 12:00 AM ADDED : நவ 26, 2026 10:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லாரி: பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு காரணமாக, நண்பரை கொலை செய்து, உடலை துண்டு, துண்டாக வெட்டி ஏரி, கால்வாய்களில் வீசிய நால்வர் கைது செய்யப்பட்டனர்.

பல்லாரி மாவட்டம், சிரகுப்பா தாலுகாவின், தெக்கலகோட்டே கிராமத்தைச் சேர்ந்தவர் ஹனுமந்தப்பா, 38.

இவர் அக்டோபர் 29ம் தேதியன்று வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிய மனைவி லட்சுமி, தெக்கலகோட்டே போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரித்தனர்.

கிராமத்துக்கு வந்து விசாரித்த போது, ஹனுமந்தப்பா காணாமல் போன நாளன்று, தன் நண்பர்களுடன் இருந்தது தெரிந்தது. எனவே, அவர்களிடம் விசாரித்த போது, கொலை ரகசியம் அம்பலமானது.

ஹனுமந்தப்பாவுக்கும், அவரது நண்பர்கள் உபேந்திரா, 28, சசிகுமார், 30, மல்லிகார்ஜுன், 35, கங்காதர், 35, பணம் கொடுக்கல், வாங்கலில் மனஸ்தாபம் இருந்தது. எனவே நால்வரும் சேர்ந்து, ஹனுமந்தப்பாவை அழைத்துச் சென்று, தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தனர்.

சாட்சியை அழிக்கும் நோக்கில், உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர். பாதி வெந்த உடலை, துண்டு, துண்டாக வெட்டி ஏரியிலும், கால்வாயிலும் வீசியது விசாரணையில் தெரிந்தது.

கொலையாளிகள் நால்வரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us