/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மெட்ரோ ரயில் நிலையங்களில் கட்டணமில்லா சைக்கிள் பார்க்கிங்
/
மெட்ரோ ரயில் நிலையங்களில் கட்டணமில்லா சைக்கிள் பார்க்கிங்
மெட்ரோ ரயில் நிலையங்களில் கட்டணமில்லா சைக்கிள் பார்க்கிங்
மெட்ரோ ரயில் நிலையங்களில் கட்டணமில்லா சைக்கிள் பார்க்கிங்
ADDED : ஜன 28, 2026 07:17 AM
பெங்களூரு: மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வரும் பயணியர், தங்கள் சைக்கிள்களை கட்டணமின்றி நிறுத்தி கொள்ளும் வகையில், புதிய திட்டம் அமலுக்கு வர உள்ளது.
பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில், சைக்கிள்களை நிறுத்த ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரூபாயும், ஒரு நாளைக்கு, 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், பயணியர் தங்கள் சைக்கிள்களை கட்டணமின்றி நிறுத்தி விட்டு செல்ல, மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இத்திட்டம் பயணியரிடம் சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது என, மெட்ரோ நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. முதல் கட்டமாக ஒன்பது ரயில் நிலையங்களில் கட்டணமில்லா சைக்கிள் பார்க்கிங் அறிமுகம் செய்யப்படுகிறது.
ஊதா வழித்தடத்தில் உள்ள பையப்பனஹள்ளி, மைசூரு சாலை; பச்சை வழித்தடத்தில் உள்ள மாதவரா, பீன்யா இண்டஸ்ட்ரீஸ், ஜே.பி., நகர்; மஞ்சள்வழித்தடத்தில் உள்ள பி.டி.எம்., லே - அவுட், எலக்ட்ரானிக் சிட்டி, ராகிகுடா, ஜெயதேவா மருத்துவமனை ஆகிய ஒன்பது ரயில் நிலையங்களில் முதற்கட்டமாக அமல்படுத்தப்பட உள்ளது. அடுத்த மாதம் இறுதியில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

