தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

பெங்களூரு மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

பெங்களூரு மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்


ADDED : மே 04, 2025 11:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2025 11:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் மாணவர் வருகையை அதிகரிக்க, எட்டு ஆண்டுகளுக்கு பின், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க முன்வந்துள்ளது.

கடந்த 2006 - 07ல், ம.ஜ.த.,வுடன் பா.ஜ., கூட்டணி அமைத்த போது, எடியூரப்பா துணை முதல்வாராக பதவியேற்றார். மாணவர்களை அரசு பள்ளிக்கு வரவழைக்கும் வகையில், அரசு பள்ளியில் 8 வகுப்பு படிக்கும் மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார்.

பல கி.மீ., நடந்து பள்ளிக்கு சென்ற மாணவர்களுக்கு, சைக்கிள் திட்டம் வரப்பிரசாதமாக அமைந்தது. பொது மக்களிடமும் வரவேற்பு பெற்றது. ஆனால் இத்திட்டம் சில காலங்களில் நிறுத்தப்பட்டது. இதனால் பல மாணவர்கள் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டனர்.

சித்தராமையா இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றதால் இலவச சைக்கிள் திட்டத்தை மீண்டும் துவங்க வேண்டும் என்று அவரிடம், கல்வி துறையினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குவது குறித்து மறுஆய்வு செய்யப்பட்டு அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து பெலகாவி சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய துவக்க கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா, 'மீண்டும் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் அமல்படுத்த அரசு ஆர்வமாக உள்ளது' என்று பேசினார்.

இதற்கிடையில், பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களை பள்ளிக்கு வரவழைக்க திட்டமிட்டு உள்ளது. இதற்காக, எட்டு ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது.

இலவச சைக்கிளுடன் மாணவ - மாணவியர். - கோப்பு படம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us