/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கொப்பால் கவி மடம் சார்பில் ஏழைகளுக்கு இலவச கல்லுாரி
/
கொப்பால் கவி மடம் சார்பில் ஏழைகளுக்கு இலவச கல்லுாரி
கொப்பால் கவி மடம் சார்பில் ஏழைகளுக்கு இலவச கல்லுாரி
கொப்பால் கவி மடம் சார்பில் ஏழைகளுக்கு இலவச கல்லுாரி
ADDED : டிச 12, 2025 06:40 AM

கொப்பால்: விவசாயிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், நடைபாதை விவசாயிகள் உட்பட ஏழை குடும்பங்களின் பெண்களுக்காக, கவி மடம் சார்பில் இலவச பி.யு.சி., கல்லுாரி மற்றும் ஹாஸ்டல் கட்டப்படுகிறது.
இது குறித்து, கொப்பாலின் கவி மடத்தின் சித்தேஸ்வர மஹாசுவாமிகள் கூறியதாவது:
ஆட்டோ ஓட்டுநர், விவசாயிகள், நடைபாதை வியாபாரிகள் போன்ற ஏழை குடும்பங்களின் இளம் பெண்களுக்காக, இலவச பி.யு.சி., கல்லுாரி மற்றும் விடுதி கட்டப்படுகிறது. கொப்பால் நகரின், காட்ரள்ளி கிராமத்தில் 60 கோடி ரூபாய் செலவில், 48 ஏக்கர் பரப்பளவில் கல்லுாரி, விடுதி கட்டப்படுகிறது.
ஏற்கனவே 5,000 மாணவர்களுக்கு விடுதி கட்டியுள்ளோம். கிராமத்து விவசாயிகள், நடைபாதை வியாபாரிகள், துப்புரவு பணி செய்வோர் உட்பட, ஏழைகளால் தங்களின் மகள்களை லட்சக்கணக்கான ரூபாய் டொனேஷன் கொடுத்து, கல்லுாரியில் சேர்க்க முடியாது.
எனவே இவர்களுக்காக இலவச பி.யு.சி., கல்லுாரியும், விடுதியும் கட்டுகிறோம். இங்கு 1,500 மாணவியருக்கு இட வசதி இருக்கும். நீட், சி.இ.டி., - ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., கோச்சிங்கும் இலவசமாகவே கிடைக்கும்.
விடுதி கட்டும் பணி பெரும்பாலும் முடிந்துள்ளது. டைனிங் ஹால் கட்டப்படுகிறது. சுற்றிலும் 20,000 மரக்கன்றுகளை நட்டுள்ளோம். 2026 ஜூன் மாதம் அட்மிஷன் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

