இலவச எலக்ட்ரிக் அடுப்பு? மத்திய அமைச்சர் எச்சரிக்கை
இலவச எலக்ட்ரிக் அடுப்பு? மத்திய அமைச்சர் எச்சரிக்கை
ADDED : ஆக 18, 2026 02:44 AM

பெங்களூரு: 'மத்திய அரசு இலவச எலக்ட்ரிக் அடுப்பு வழங்குவதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ முற்றிலும் தவறானது' என மத்திய கல்வி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறி உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசு இலவச மின்சார அடுப்பு வழங்குவதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்தி முற்றிலும் தவறானது. மத்திய அரசு இலவச மின்சார அடுப்பு திட்டம் எதையும் செயல்படுத்தவில்லை. இதுபோன்ற போலி செய்திகளை யாரும் பகிர வேண்டாம்.
மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் செய்தியை மட்டுமே நம்ப வேண்டும். இது போன்று சமூக வலைதளங்களில் வெளியிடப்படும், 'லிங்க்'கை தொட்டு பணத்தை இழக்க வேண்டாம்.
வங்கி விபரங்கள், தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் பகிர வேண்டாம். எச்சரிக்கையாக இருக்கவும். போலி செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
