ADDED : ஜூலை 30, 2026 11:10 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு: பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட், மாரத்தஹள்ளியில் உள்ள வாசன் கண் மருத்துவமனைகளில், ஆகஸ்ட் 8, 9, 10 ஆகிய 3 நாட்கள் இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாம் நடக்க உள்ளது.
'ரெடினா பிங் டே' எனும் பெயரில், விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. முகாமில் பங்கேற்பவர்கள் 4,000 ரூபாய் மதிப்பிலான பரிசோதனையை இலவசமாக பெறலாம். நீரிழிவு நபர்களுக்கு ஏற்படும் கண் விழித்திரை சார்ந்த நோய்களை குணப்படுத்தும் நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது.
'நீரிழிவு நபர்களுக்கு விழித்திரை பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கிறது. எனவே, விழித்திரை சார்ந்த நோய்களை துவக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால், அவர்கள் பார்வை இழப்பு ஏற்படுவதை தடுக்கலாம்' என, வாசன் கண் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
