/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசு பள்ளி, கல்லுாரி மாணவியருக்கு இலவச 'சானிடரி நாப்கின்' திட்டம்
/
அரசு பள்ளி, கல்லுாரி மாணவியருக்கு இலவச 'சானிடரி நாப்கின்' திட்டம்
அரசு பள்ளி, கல்லுாரி மாணவியருக்கு இலவச 'சானிடரி நாப்கின்' திட்டம்
அரசு பள்ளி, கல்லுாரி மாணவியருக்கு இலவச 'சானிடரி நாப்கின்' திட்டம்
ADDED : டிச 22, 2025 05:27 AM
பெங்களூரு: அரசு பள்ளி, கல்லுாரி மாணவியரின் நலனுக்காக, 'துாய்மை' திட்டத்தின் கீழ், 'சானிடரி நாப்கின்'கள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து சுகாதாத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
துாய்மை திட்டத்தின் கீழ், 2025 - 26ம் ஆண்டில் அரசு பள்ளி, கல்லுாரிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவியருக்கு சானிடரி நாப்கின்கள் வழங்கப்படும். நகர்ப்புறங்கள், கிராமப்புறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி, கல்லுாரிகளின் விடுதிகளில் தங்கியுள்ள மாணவியருக்கும் இந்த சலுகை கிடைக்கும்.
இத் திட்டத்துக்காக 2 கோடியே 35 லட்சத்து 74,084 சானிடரி நாப்கின்கள் வாங்க, 71 கோடி ரூபாய் செலவிட, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு நாப்கின்களுக்கும் 30.47 ரூபாய் செலவாகும்.
நடப்பாண்டு ஆகஸ்டில் சானிடரி நாப்கின்கள் பற்றாக்குறை இருந்ததால், பள்ளி, கல்லுாரி மாணவியருக்கு நாப்கின் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே புதிதாக டெண்டர் கோரியுள்ளோம். டெண்டர் முடிவாகும் வரை, சுகாதாரத்துறை சார்பில், மாவட்ட வாரியாக சானிடரி நாப்கின்கள் வாங்கி, மாணவியருக்கு வழங்கப்படும்.
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு, பி.யு.சி., வரையிலான 19,64,507 மாணவியர், இத்திட்டத்தால் பயன் அடைவர். இவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு தேவையான சானிடரி நாப்கின்களை வாங்கி வழங்கும்படி, அந்தந்த மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

