/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இலவச திட்டங்கள் அபாயமானவை காங்., தலைவர் தேஷ்பாண்டே கருத்து
/
இலவச திட்டங்கள் அபாயமானவை காங்., தலைவர் தேஷ்பாண்டே கருத்து
இலவச திட்டங்கள் அபாயமானவை காங்., தலைவர் தேஷ்பாண்டே கருத்து
இலவச திட்டங்கள் அபாயமானவை காங்., தலைவர் தேஷ்பாண்டே கருத்து
ADDED : மார் 30, 2025 03:51 AM

உத்தரகன்னடா : ''வாக்குறுதித் திட்டங்களால், மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது. இலவச திட்டங்கள் மிகவும் அபாயமானவை. மக்களை சோம்பேறிகளாக்கும்,'' என, காங்., - எம்.எல்.ஏ.,வும், நிர்வாக மேம்பாட்டு ஆணைய தலைவருமான தேஷ்பாண்டே கூறினார்.
உத்தரகன்னடாவில் அவர் அளித்த பேட்டி:
இலவச திட்டங்கள் மிகவும் அபாயமானவை. மக்களை சோம்பேறிகளாக்கும். எனவே ஒவ்வொரு சேவைக்கும் கட்டணம் விதிக்க வேண்டும். உதாரணத்துக்கு 'சக்தி' திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம். இத்திட்டத்தால் போக்குவரத்து கழகங்கள் நஷ்டம் அடைகின்றன.
இத்திட்டத்தில் பெண்கள், பஸ்களில் இலவசமாக பயணம் செய்வதால் அவர்கள் சந்தோஷப்படுகின்றனர். இந்த திட்டத்தை ஆண்களுக்கும் விஸ்தரிக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது. இவர்களுக்கும் இலவச பயணம் செய்ய வாய்ப்பு அளித்தால், போக்குவரத்துக் கழகங்களை எப்படி நடத்துவது?
சக்தி திட்டத்துடன், கிரஹ லட்சுமி, கிரஹ ஜோதி, யுவநிதி, அன்னபாக்யா திட்டங்களையும் அரசு செயல்படுத்தியுள்ளது. இத்தகைய இலவச திட்டங்களால், அரசு கருவூலத்துக்கு சுமை அதிகரிக்கிறது. இது பற்றி ஆய்வு செய்ய வேண்டும்.
மக்களுக்கு எதையும் இலவசமாக கொடுக்கக் கூடாது. இலவசம் என்ற வார்த்தையே அபாயமானது. போக்குவரத்துக் கழகத்துக்கு ஆண்டுதோறும் புதிய பஸ்கள் வாங்குவது, ஊழியர்களை நியமிப்பது கட்டாயம்.
பஸ் பயண கட்டணத்தை அதிகரித்தால், எதிர்ப்பு எழுகிறது. பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய அனுமதி அளித்தால், போக்குவரத்துக் கழகத்தை நிர்வகிப்பது கஷ்டம். இது என் தனிப்பட்ட கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.