தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கேம் ஆன் 1.2..3...

கேம் ஆன் 1.2..3...

கேம் ஆன் 1.2..3...


UPDATED : நவ 20, 2026 12:00 AM

ADDED : நவ 19, 2026 07:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 12:00 AM ADDED : நவ 19, 2026 07:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கர்நாடகா வெற்றி: சையத் முஷ்தக் அலி கோப்பையின் 3வது ரவுண்டில், கர்நாடகா – மிசோரம் அணிகள், மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் மோதின. இதில், 7 விக்கெட் வித்தியாசத்தில் மிசோரம் அணியை கர்நாடக அணி வீழ்த்தியது. கர்நாடக வீரர் மன்வந்த் குமாரின் அபாரமான பந்து வீச்சின் மூலம் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.



முதலிடம்: பெங்களூரு ஜெயநகரில் நடந்த மாநில அளவிலான டென்பின் பவுலிங் போட்டியில் பெங்களூரை சேர்ந்த ஆகாஷ் ஆசாக் குமார் மூன்றாவது முறையாக முதலிடத்தை பிடித்து அசத்தினார். அவர் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க பயிற்சி எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.



இறுதி போட்டி: இந்திய கிரிக்கெட்டின் சீனியர் மகளிர் டி – 20 கோப்பையின் இறுதி போட்டி வரும் 20ம் தேதி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. இதில், கர்நாடக அணி – ரயில்வே அணியுடன் மோத உள்ளது. இரு அணிகளும் சக்தி வாய்ந்ததாக திகழ்வதால், இறுதி போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என கிரிக்கெட் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us