ADDED : ஆக 27, 2026 07:19 PM

* முதலிடத்தில் மயங்க்
மாநில அளவிலான ஸ்னுாக்கர் விளையாட்டு போட்டியில், ஜூனியர் பிரிவில், பெங்களூரை சேர்ந்த் மயங்க் கார்த்திக் முதலிடத்தை பிடித்தார். ஜூனியர் பிரிவில் நடந்த மூன்று விதமான போட்டிகளிலும் முதலிடத்தை பிடித்து அசத்தினார்.
ஏ.பி.வி.சி., அணி வெற்றி
பெங்களூரு ஸ்ரீ கன்டீரவா மைதானத்தில் நடக்கும் ரங்கராஜன் நினைவு கோப்பை கூடைப்பந்து தொடரின் அரையிறுதி போட்டியில் ஏ.பி.வி.சி., அணி - ஒய்.எம்.எம்.ஏ., அணிகள் மோதின. இதில், 18 புள்ளிகள் வித்தியாசத்தில், ஏ.பி.வி.சி., அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இறுதி ஆட்டத்தில், ஏ.வி.பி.சி., - சிக்கமகளூரு மாவட்ட அணிகள் மோத உள்ளன.
பெங்களூரு வெற்றி
கர்நாடக கிரிக்கெட் சங்கம் நடத்தும், எஸ்.ஏ., ஸ்ரீனிவாசன் நினைவு கோப்பை, 23 வயதுக்கு உட்பட்டோருக்கான, இரண்டு நாள் டெஸ்ட் போட்டியில், பெங்களூரு - ராய்ச்சூரு அணிகள் மோதின. இதில், பெங்களூரு அணி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
