/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் மூன்று இடங்களில் குப்பை சேகரிப்பு மையம் திறப்பு
/
பெங்களூரில் மூன்று இடங்களில் குப்பை சேகரிப்பு மையம் திறப்பு
பெங்களூரில் மூன்று இடங்களில் குப்பை சேகரிப்பு மையம் திறப்பு
பெங்களூரில் மூன்று இடங்களில் குப்பை சேகரிப்பு மையம் திறப்பு
ADDED : டிச 27, 2025 06:30 AM

பெங்களூரு: பெங்களூரு சாலைகளில், மக்கள் குப்பையை வீசி செல்வதை தடுக்க, மூன்று குப்பை சேகரிக்கும் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பெங்களூரில் தினமும் காலையில், வீடு, வீடாக ஜி.பி.ஏ., ஊழியர்கள் குப்பையை சேகரித்து வருகின்றனர். இருப்பினும், சாலை ஓரங்களில் பலரும் குப்பையை வீசி விட்டுச் செல்கின்றனர்.
இதனால், பிரதான சாலைகளும் குப்பையாக காட்சி அளிக்கின்றன. இதைத்தடுக்க மாநகராட்சி தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நகரில் சாலையோரங்களில் குப்பையை கொட்டப்படும் இடங்களை அடையாளம் கண்டு, சிறிய அளவிலான குப்பை சேமிக்கும் மையங்களை நிறுவ பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் திட்டமிட்டது.
அதன்படி, நேற்று பெங்களூரில் கதிரேனஹள்ளி, பிரகதிபுரா, சரபந்தேபாளையா என, மூன்று இடங்களில் குப்பை சேகரிக்கும் மையங்கள் நிறுவப்பட்டு உள்ளன. இங்கு காலை, 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, அவற்றில் குப்பையை கொட்டலாம்.
குப்பையை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தனித்தனியாக பிரித்து கொட்டுவதற்கு வசதியாக பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. இதுபோன்ற, குப்பை சேகரிக்கும் மையங்கள் வரும் நாட்களில், நகர் முழுதும் திறக்கப்படும் என, பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

