தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காஸ் சிலிண்டர்கள் பதுக்கலா; போலீஸ் டி.ஜி.பி., எச்சரிக்கை

 காஸ் சிலிண்டர்கள் பதுக்கலா; போலீஸ் டி.ஜி.பி., எச்சரிக்கை

 காஸ் சிலிண்டர்கள் பதுக்கலா; போலீஸ் டி.ஜி.பி., எச்சரிக்கை


ADDED : மார் 13, 2026 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 06:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர் சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, கள்ளச்சந்தையில் வணிக காஸ் சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநில போலீஸ் டி.ஜி.பி., சலீம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நிறுத்தம் மேற்காசியாவில் ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானும் பதில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால், ஹோட்டல்கள், தொழிற்சாலைகளுக்கு வணிக சிலிண்டர் காஸ் வினியோகத்தை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மூன்று நாட்களாக நிறுத்தி உள்ளன. இதன் எதிரொலியாக, ஹோட்டல்கள், காஸ் சிலிண்டர்கள் காலியானதால் மூடப்பட்டன. பி.ஜி., எனும் தங்கும் விடுதிகளிலும் இதேநிலை தான் நிலவுகிறது.

தற்போது காஸ் சிலிண்டருக்கு மாற்றாக, ஊழியர்களுக்கு உதவும் வகையில், விறகு அடுப்புக்கு மாறி உள்ளன. பல ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் விறகு அடுப்புகளை பயன்படுத்தி வருகின்றன.

இது தொடர்பாக நேற்று முன்தினம் மாநில தலைமை செயலர் ரஜினிஷ், உயர் போலீஸ் அதிகாரிகள், உணவுத்துறை, நகர போலீஸ் கமிஷனர், காஸ் விநியோக நிறுவனங்களின் பிரதிநிதிகள், பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் ஆலோசனை நடத்தினார். சிலிண்டர் பதுக்கலை தடுக்க மூன்று துறைக்கும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், மாநில போலீஸ் டி.ஜி.பி., சலீம் வெளியிட்டு உள்ள அறிக்கை:

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக, பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில், காஸ் பற்றாக்குறை ஏற்படாத வகையில், அனைத்து மாவட்ட எஸ்.பி.,க்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரோந்து பணியில் ஈடுபடும் ஹொய்சாலா ஊழியர்கள், பெங்களூரு நகருக்கு உட்பட்ட காஸ் குடோன்களை கண்காணிக்க வேண்டும். நகரில் உள்ள இந்த குடோன்களுக்கு எஸ்.ஐ., அந்தஸ்து உள்ள அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும். அங்கு எத்தனை காஸ் சிலிண்டர்கள் உள்ளன. எத்தனை நாட்களுக்கு தேவைப்படும்; எத்தனை ஆர்டர்கள் வருகின்றன, எத்தனை வெளியே செல்கின்ற என்ற தகவலை கேட்க வேண்டும்.

குடோனில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு வினியோகிக்கப்படும் காஸ் சிலிண்டர்களின் விலை, நிர்ணயிக்கப்பட்ட அளவில் தான் இருக்க வேண்டும்; விற்கப்பட வேண்டும். கூடுதல் தொகைக்கு விற்றாலோ அல்லது செயற்கையான காஸ் தட்டுப்பாடு ஏற்படுத்தினாலோ, சம்பந்தப்பட்ட ஏஜென்சிக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.

காஸ் ஏஜன்சிகள் குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக வசூலித்தார், உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

கடும் நடவடிக்கை பாயும் கோலார் மாவட்டத்தில், வணிக காஸ் சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை தொடர்ந்து, இந்த மாவட்டத்தில் வரும் நாட்களில் நடைபெற விருந்த திருமணங்கள், இல்லற விழாக்கள், பெரிய விருந்துகள் மற்றும் கண்காட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

திருமணத்திற்கு ஏற்கனவே தேதி நிர்ணயித்து, ஆடம்பரமான சிற்றுண்டி மற்றும் உணவுகள் தயாரிக்க கேட்டவர்கள், இப்போது வணிக சிலிண்டர்கள் பற்றாக்குறையால் பாதித்துள்ளனர்.

ஒரு திருமண நிகழ்ச்சிக்கு குறைந்தது ஐந்து முதல், 10 சிலிண்டர்கள் தேவை. திருமண ஆர்டர்களை பெற்ற கேட்டரிங் நிறுவனங்கள் எரிவாயு நிறுவனங்களை அணுகி காஸ் சிலிண் டர்களுக்கு ஏற்பாடு செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளன. வரும் நாட்களில் பல திருமண விழாக்கள் நடக்க உள்ளன.

ஆனால், அவர்களுக்கு கேட்டரிங் நிறுவனங்களால், எந்த உத்தரவாதமும் தரமுடியவில்லை. மேலும், வீட்டு உபயோகத்துக்கு சிலிண்டர்கள் கிடைக்குமா, இல்லையா என்ற கவலையிலும், மக்கள் ஆழ்ந்துள்ளனர்.

காஸ் சிலிண்டருக்கான ஆன்லைன் புக்கிங் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிலர் பழையபடி விறகு அடுப்புகளை நாடுகின்றனர். சிலர் திருமண ஆர்டர்களை ஏற்கவில்லை. சிலர் பூரி அல்லது தோசை செய்ய முடியாது என, நிபந்தனை விதிக்கின்றனர்.

இதையடுத்து, கோலார் கலெக்டர் எம்.ஆர். ரவி கூறியதாவது:

சமையல் எரிவாயு, சமையல் எண்ணெய், தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை, சட்ட விரோதமாக சேமித்து வைத்திருந்தாலோ, அவற்றை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்க முற்பட்டாலோ, அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் மாவட்டம் முழுதும் உள்ள உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், அதிரடி சோதனைகளை மேற்கொள்வர்.

சந்தையில் உணவுப் பொருட்களை விலையை உயர்த்தி விற்பது அல்லது சட்ட விரோதமாக சேமித்து வைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற நபர்கள் மீது கடுமை யான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ரவி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us