/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'என் குழந்தையை என்னிடம் கொடுத்து விடு' ; சீரியல் நடிகையை கடத்திய கணவரால் பரபரப்பு
/
'என் குழந்தையை என்னிடம் கொடுத்து விடு' ; சீரியல் நடிகையை கடத்திய கணவரால் பரபரப்பு
'என் குழந்தையை என்னிடம் கொடுத்து விடு' ; சீரியல் நடிகையை கடத்திய கணவரால் பரபரப்பு
'என் குழந்தையை என்னிடம் கொடுத்து விடு' ; சீரியல் நடிகையை கடத்திய கணவரால் பரபரப்பு
UPDATED : டிச 17, 2025 12:56 AM
ADDED : டிச 16, 2025 11:35 PM

பேட்ராயனபுரா: குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்காக, சீரியல் நடிகையை, அவரது கணவரே ஆள்வைத்து கடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் ஹாசனை சேர்ந்தவர் ஹர்ஷவர்த்தன், 35. தொழிலதிபர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர். இவரும், கன்னட சின்னத்திரை தொடர்களில் துணை நடிகையாக நடித்து வரும் சைத்ராவும் காதலித்து, 2023ல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. குடும்ப தகராறில் எட்டு மாதங்களுக்கு முன் இருவரும் பிரிந்தனர்.
ஹர்ஷவர்த்தன் ஹாசனில் வசிக்கிறார். சைத்ரா தன் குழந்தையுடன் பெங்களூரு மாகடி சாலையில் வசிக்கிறார். விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில், சைத்ரா வழக்கு தொடர்ந்து உள்ளார். கடந்த 7ம் தேதி காலை, மைசூரில் நடந்த, 'டிவி' தொடர் படப்பிடிப்பில் பங்கேற்க வீட்டில் இருந்து புறப்பட்டார்.
மைசூரு ரோடு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, மைசூருக்கு வாடகை காரில் சென்றார். காரை மைசூரு ரோட்டில் ஓட்டிச் செல்லாமல், வேறு ரோட்டிற்கு டிரைவர் சென்று உள்ளார். அதிர்ச்சி அடைந்த சைத்ரா, கார் டிரைவரிடம் கேட்ட போது, 'உங்கள் கணவர் ஹர்ஷவர்த்தன் கூறியதால், உங்களை கடத்தி உள்ளேன்' என்று கூறியுள்ளார்.
இதையடுத்து தன் சகோதரி லீலாவிடம் மொபைல் போனில் பேசிய சைத்ரா, தான் கடத்தப்பட்டது குறித்து கூறினார். சைத்ராவின் தாய் சித்தம்மா, ஹர்ஷவர்த்தனிடம் மொபைல் போனில் பேசிய போது, 'எனக்கு என் குழந்தை வேண்டும்; என் குழந்தை என்னிடம் வந்தால் தான், உங்கள் மகளை விடுவிப்பேன்' என்று கூறியுள்ளார்.
உடன், போலீசாரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் பற்றி, சைத்ராவின் சகோதரி லீலா புகார் செய்தார். ஹர்ஷவர்த்தனின் மொபைல் நம்பரையும் கொடுத்தார்.
அவரை தொடர்பு கொண்டு போலீசார் பேசினர். பின், போலீஸ் நிலையத்திற்கு சைத்ராவுடன் ஹர்ஷவர்த்தன் வந்தார். 'உங்கள் குடும்ப பிரச்னையை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்' என, இருவருக்கும் போலீசார் அறிவுரை கூறி, அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். கடந்த, 7ம் தேதி நடந்த இந்த சம்பவம் பற்றிய தகவல் தற்போது தான் வெளியாகி உள்ளது.

