/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விடுமுறைக்கு வெளியூர் போறீங்களா? பெங்., போலீஸ் கமிஷனர் அறிவுரை!
/
விடுமுறைக்கு வெளியூர் போறீங்களா? பெங்., போலீஸ் கமிஷனர் அறிவுரை!
விடுமுறைக்கு வெளியூர் போறீங்களா? பெங்., போலீஸ் கமிஷனர் அறிவுரை!
விடுமுறைக்கு வெளியூர் போறீங்களா? பெங்., போலீஸ் கமிஷனர் அறிவுரை!
ADDED : ஏப் 07, 2025 10:37 PM

பெங்களூரு; கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், ஒரு நாளுக்கு மேல் சுற்றுலா செல்வோருக்கு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பலரும் குடும்பத்துடன் வெளியூர், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர்.
இதை கண்டறியும் திருடர்கள், வீட்டின் பூட்டை உடைத்து, விலை உயர்ந்த தங்கம், வெள்ளி உட்பட பொருட்களை திருடிச் செல்கின்றனர்.
இதை தவிர்க்கும் வகையில், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா, தன் 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
வெளியூர் செல்லும்போது வீட்டின் அனைத்து ஜன்னல் கதவுகள், நுழைவு வாயில்களை பூட்டுங்கள். வீட்டின் சாவியை கால் மீதி கீழும், பூ செடிகள், ஷூக்களில் வைக்காதீர்கள். ஏனெனில், திருடர்கள் முதலில் இந்த இடங்களில் தான் தேடுவர்
வீட்டில் கண்காணிப்பு கேமரா இருந்தால், அது சரியாக வேலை செய்கிறதா, வீட்டின் அனைத்து பகுதியையும் கண்காணிக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்
நீங்கள் வெளியூர் செல்வதை, சமூக வலைதளங்களில் பதிவிடாதீர்கள். ஏனெனில், இதை யார் வேண்டுமானாலும் பார்வையிடலாம்
வீடுகளில் பழைய பூட்டுகள் இருந்தால், அதற்கு பதிலாக நவீன பூட்டுகளை பயன்படுத்துங்கள். அதுபோன்று வீட்டின் கேட்டில் பூட்டுகள் வெளியே தெரியும் வகையில் மாட்ட வேண்டாம். அவ்வாறு மாட்டும்போது, வீட்டில் யாரும் இல்லை என்பதை ஊர்ஜிதப்படுத்தும்
வெளியூர் செல்லும் நாட்களில் நாளிதழ்கள், பால் பாக்கெட்களை போட வேண்டாம் என்று முன்கூட்டியே சம்பந்தப்பட்டோருக்கு தகவல் தெரிவித்து விடுங்கள். வீட்டின் வாசலில் பல நாட்களின் நாளிதழ்கள், பால் பாக்கெட்கள் இருந்தால் வீட்டில் யாரும் இல்லை என்பது தெரிந்துவிடும்
வீட்டில் குறைந்தபட்சம் ஒரு மின் விளக்கை எரிய விடுங்கள். இரவு நேரத்தில் மின் விளக்கு எரிந்தால், வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இருப்பது தெரியும். திருடர்களும் வரமாட்டார்கள்
விலை உயர்ந்த தங்கம், வெள்ளி நகைகள், பொருட்களை வங்கி லாக்கரில் வைத்து விடுங்கள்
வீட்டில் திருட்டு சம்பவங்கள் நடப்பதை தவிர்க்க, எச்சரிக்கை மணி எழுப்பும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

