/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.2.25 கோடி மதிப்பு பொருட்கள்; ரயில் பயணியரிடம் ஒப்படைப்பு
/
ரூ.2.25 கோடி மதிப்பு பொருட்கள்; ரயில் பயணியரிடம் ஒப்படைப்பு
ரூ.2.25 கோடி மதிப்பு பொருட்கள்; ரயில் பயணியரிடம் ஒப்படைப்பு
ரூ.2.25 கோடி மதிப்பு பொருட்கள்; ரயில் பயணியரிடம் ஒப்படைப்பு
ADDED : டிச 25, 2025 07:23 AM
பெங்களூரு: ரயில் மற்றும் ரயில் நிலையத்தில், பயணியர் மறந்து விட்டு சென்ற பொருட்களை மறந்தால் பாதுகாப்பாக பயணியரிடம் சேர்க்கும், ரயில்வே பாதுகாப்பு படை, நடப்பாண்டு 2.25 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை, உரியவரிடம் சேர்த்துள்ளது.
இது குறித்து, தென் மேற்கு ரயில்வே துறை வெளியிட்ட அறிக்கை:
ரயில்களில் பயணிக்கும் பலரும், தங்களின் பொருட்களை மறந்து வைத்து விட்டு செல்கின்றனர். அதன்பின் ரயில்வே அதிகாரிகளிடம் தகவல் கூறுகின்றனர். ஆர்.பி.எப்., எனும் ரயில்வே பாதுகாப்பு படையினர், பொருட்களை கண்டுபிடித்து உரியவரிடம் சேர்க்கின்றனர்.
ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பயணியர் மறந்து விட்ட பொருட்களை, பாதுகாப்பாக எடுத்து வைக்கின்றனர்.
இதற்காகவே, 'ஆப்பரேஷன் அமானத்' என்ற பெயரில் குழு அமைத்து, ஊழியர்களை நியமித்துள்ளோம்.
வெறும் 650 ரூபாய் இருந்த பர்ஸ் முதல், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருந்த பை வரை, ஆர்.பி.எப்., கண்டுபிடித்து கொடுத்தது.
ரயிலின் கழிப்பறைக்கு சென்ற பயணி ஒருவர், கை கழுவும் போது 80,000 ரூபாய் மதிப்புள்ள தங்க மோதிரம் தவறி விழுந்தது. இதையும் ஆர்.பி.எப்., ஊழியர்கள் கண்டுபிடித்து கொடுத்தனர்.
சமீப நாட்களாக ரயில் மற்றும் ரயில் நிலையங்களில், பயணியர் மறந்து விட்ட பொருட்களில், மொபைல் போன்களே அதிகம். ஐபோன் உட்பட, விலை உயர்ந்த மொபைல் போன்களை, ரயிலில் சார்ஜில் போடும் பயணியர், இறங்கும் போது போனை மறந்து இறங்குகின்றனர். லேப்டாப், டேப், கைகடிகாரங்களை மறந்துவிட்டு வருவோரும் அதிகம்.
பயணி எந்த பெட்டியின், எந்த பர்த்தில் பொருட்களை மறந்தனர் என்பதை, உதவி எண் 130 அல்லது railmadad.indianrailways.gov.in என்ற இணையதளத்தில், தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஆர்.பி.எப்., செக்யூரிட்டி கன்ட்ரோல் அறைக்கு வரும் தகவலின் அடிப்படையில், அடுத்த ரயில் நிலையத்துக்கோ அல்லது அருகில் உள்ள ரயில் நிலையத்துக்கோ தகவல் அனுப்பப்படும். அங்குள்ள ஊழியர்கள், உடனடியாக பயணியரை தொடர்பு கொண்டு, தொலைந்த பொருட்களின் நிறம் உட்பட, மற்ற தகவலை கேட்டறிவார். அதன்பின் பொருட்களை கண்டுபிடித்து, அவர்களுடையதா என்பதை உறுதி செய்து கொண்டு, பொருட்களை ஒப்படைப்பர்.
பயணியர் தகவல் தராவிட்டாலும், ஆர்.பி.எப்., ஊழியர்கள் ரோந்துசுற்றும் போது, கண்டுபிடிக்கப்படும் பொருட்களை, பாதுகாப்பாக வைத்திருந்து, போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வருவர். இங்கிருந்து ரயில் நிலையத்தின் கிளாக் ரூமுக்கு அனுப்புவர்.
இங்கும் பயணியர் அவரவர் பொருட்களை பெறலாம். நடப்பாண்டு டிசம்பர் வரை, தென் மேற்கு ரயில்வேத்துறை 2.25 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, உரியவர்களிடம் சேர்த்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

