திருட்டு வழக்கில் மூன்று பேருக்கு 'காப்பு' ரூ.45 லட்சம் பொருட்கள் மீட்பு
திருட்டு வழக்கில் மூன்று பேருக்கு 'காப்பு' ரூ.45 லட்சம் பொருட்கள் மீட்பு
ADDED : ஆக 08, 2026 07:05 AM
பங்கார்பேட்டை: பங்கார்பேட்டை போலீசார், பெமல் நகரில் நடந்த திருட்டு வழக்கில், 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தங்கவயல் எஸ்.பி., ஷிவான்ஷு ராஜ்புத் நேற்று கூறியதாவது:
பங்கார்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பெமல் நகரின், சாந்தி நகர் பகுதியில், 2026 ஜனவரி 13ம் தேதி ஒரு வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டன.
திருட்டை கண்டுப்பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இவ்வழக்கில் சுரேஷ், 35, வீரபாண்டியன், 25, லட்சுமிகாந்தன், 23, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் திருடிய, 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 300 கிராம் தங்க நகைகள் மற்றும் 475 கிராம் வெள்ளிப் பொருட்கள் , மீட்கப்பட்டன.
முக்கிய குற்றவாளி சுரேஷ் மீது கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, கேரளா மாநிலங்களில் 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
