தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அரசு பஸ் நடத்துநர் அசத்தல்

 அரசு பஸ் நடத்துநர் அசத்தல்

 அரசு பஸ் நடத்துநர் அசத்தல்


ADDED : நவ 30, 2025 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 04:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: மனிதன் தன் மனதில் தோன்றும் எண்ணங்களை, மற்றவர்களுக்கு எளிதில் புரியவைப்பதற்காக மொழிகள் உருவாகின. அடிப்படையில் மொழி என்பது கருத்துகளை பிறரிடம் பரிமாறக்கூடிய சாதனமே. ஆனால், பலரும் தங்களின் தாய் மொழிக்கு, தாய்க்கு அளிக்கும் மரியாதையை தருகின்றனர். சிலர் மொழியின் மீது கொண்ட காதலால் தீவிர பற்றாளராக மாறுகின்றனர். இவர்கள், பல விஷயங்களை செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு நபரை பற்றி பார்ப்போமா.

தாவணகெரே மாவட்டம், ஹொன்னாலி தாலுகாவில் உள்ள குண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ், 48. இவர், ஷிவமொக்கா மாவட்டம் ஷிகாரிபுராவில் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார். இவர் நடத்துநர் மட்டும் கிடையாது; தீவிர கன்னட அபிமானியும் கூட. கன்னடத்தின் மீது அவர் கொண்ட காதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என கூறலாம். அந்த அளவுக்கு தீவிர மொழி பற்றாளராக உள்ளார்.

அலங்காரம் இவர் நடத்துநராக பணிபுரியும் பஸ்சில் கன்னட கொடியான சிவப்பு, மஞ்சள் கலரில் சீட் கவர்களை மாற்றி விட்டார். பஸ்சின் உள்புறத்தில் சிவப்பு, மஞ்சள் கலர்களில் பலுான், ரிப்பன், கன்னட தாய் வரைபடம் ஆகியவை உள்ளன. அதுமட்டுமின்றி கவிஞர்கள், மொழியியல் வல்லுநர்கள், நடிகர்கள் ராஜ்குமார், புனித் ராஜ்குமார் படங்களை பஸ்சில் வைத்து உள்ளார். இவர் பஸ்சை அலங்கரித்து தேர் போன்று மாற்றி விட்டார். இதற்காக தனது சொந்த பணத்திலிருந்து சில ஆயிரம் ரூபாய்களை செலவு செய்தார்.

இதுமட்டுமின்றி பஸ்சில் வரும் பயணியருக்கு கன்னடம் தொடர்பான எளிய வினாடி - வினா போட்டிகளை நடத்துவார். இந்த போட்டியில் வெற்றி பெரும் பயணியருக்கு கன்னட மொழியிலான புத்தகங்களை பரிசாக வழங்கி வருகிறார். இவர், தன் சிறுவயதில் இருந்தே எழுத்தாளராகவும் உள்ளார். இவர் பல சிறுகதைகளை எழுதி புத்தகங்களாக வெளியிட்டு உள்ளார்.

இவர் கவிதை எழுதும் திறனும் உடையவர். இவருக்கு பஸ் ஓட்டுநரான சிவகுமாரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்.

ரூ.2,000 செலவு இதுகுறித்து நடராஜ் கூறியதாவது:

நான், 20 ஆண்டுகளாக நடத்துநராக பணியாற்றி வருகிறேன். பயணியருக்காக வினாடி - வினா போட்டி நடத்துகிறேன். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக, புத்தகங்களை வழங்குகிறேன். இதற்காக மாதம் 2,000 ரூபாய் செலவழிக்கிறேன். எனது செயலுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

ஆண்டு தோறும் 'கன்னட ராஜ்யோத்சவா' கொண்டாடுவேன். வீடுகளில் கன்னட கொடி பறக்க வேண்டும் என்பதை அனைத்து பயணியரிடம் வேண்டுகோளாக வைத்து உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பஸ் ஓட்டுநர் சிவகுமார் கூறுகையில், ''எங்கள் பஸ்சை பலரும் வீடியோ எடுக்கின்றனர். வீடியோவை தங்கள் உறவினர்கள், பிள்ளைகளிடம் காண்பித்து மகிழ்கின்றனர். பஸ் அலங்கரிக்கப்பட்ட முறை அனைவருக்கும் பிடிக்கும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us