தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை கட்டணம் ஒழுங்குபடுத்த அரசு முடிவு
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை கட்டணம் ஒழுங்குபடுத்த அரசு முடிவு
UPDATED : அக் 18, 2026 12:00 AM
ADDED : அக் 17, 2026 09:54 PM
பெங்களூரு: தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை கட்டணத்தை ஒழுங்குபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
தனியார் மருத்துவமனைகளை பொறுத்தவரை, ஒவ்வொரு மருத்துவமனைக்கும் சிகிச்சை அளிக்கும் கட்டணத்தில் மாறுபாடு உள்ளது.
நோயாளியிடம் ஒரே நோய் அல்லது அறுவை சிகிச்சைக்கு சிறிய தனியார் மருத்துவமனை 10,000 ரூபாய் கட்டணம் வசூலித்தால், நடுத்தர மருத்துவமனைகள் 50,000 ரூபாய் வரையிலும்; மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் கட்டணம் வசூலிக்கின்றன.
இந்த கட்டண மாறுபாட்டை சரிசெய்ய வேண்டும் என்று, சுகாதார துறைக்கு தொடர்ந்து கோரிக்கை வந்தது.
இதையடுத்து தனியார் மருத்துவமனை சிகிச்சை கட்டணத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக, தனியார் மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்கள் சங்கத்துடன், கடந்த வாரம் சுகாதார துறை அமைச்சர் காதர் ஆலோசனை நடத்தினார்.
சிகிச்சை கட்டணத்தை ஒழுங்குபடுத்த பெரும்பாலானோர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், கட்டண ஒழுங்கு தொடர்பாக விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
