/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திடீர் மாரடைப்பால் அரசு ஊழியர் மரணம்
/
திடீர் மாரடைப்பால் அரசு ஊழியர் மரணம்
ADDED : ஜூலை 14, 2025 05:43 AM

மைசூரு : அரசு பஸ்சில் பணிக்கு சென்று கொண்டிருந்த அரசு ஊழியருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மாண்டியா மாவட்டம், கிலாரே கிராமத்தை சேர்ந்தவர் அருண், 44. மைசூரு நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். டி.நரசிபுரா தாலுகா அலுவலகத்தில் இரண்டாவது டிவிஷனல் உதவி கிளர்க்காக பணியாற்றி வந்தார்.
நேற்று குடும்பத்தினருடன் மைசூரில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தார். அருணுக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக தெரிவித்தார். உடனடியாக பஸ் ஓட்டுநருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர், பஸ்சை ஓரத்தில் நிறுத்தினார்.
அவ்வழியாக வந்த வாகனத்தில் அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.