தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பண்டிப்பூர், நாகரஹொளேயில் முழு நேர சவாரி்க்கு அரசு உத்தரவு

 பண்டிப்பூர், நாகரஹொளேயில் முழு நேர சவாரி்க்கு அரசு உத்தரவு

 பண்டிப்பூர், நாகரஹொளேயில் முழு நேர சவாரி்க்கு அரசு உத்தரவு


ADDED : ஜூன் 26, 2026 11:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 11:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில், பண்டிப்பூர், நாகரஹொளேயில் முழு நேர சவாரி நடத்த, அரசு அனுமதி அளித்துள்ளது.

சாம்ராஜ்நகரின் குண்டுலுபேட் தாலுகா பண்டிப்பூர், மைசூரின் நாகரஹொளே வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணியரை, வனத்துறை ஜீப்புகளில் சவாரி அழைத்து செல்கின்றனர். இதற்காக தனி கட்டணம் செலுத்த வேண்டும். இப்படி செல்லும் போது வனவிலங்குகளை மிக அருகில் காணும் வாய்ப்பு கிடைக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பண்டிப்பூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில், புலி தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். சபாரி வாகனங்கள் மீதும் சிறுத்தை பாய்ந்தது. சுற்றுலா பயணியரும் காயம் அடைந்தனர். இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக பண்டிப்பூர், நாகரஹொளேயில் சபாரிக்கு அரசு தடை விதித்தது.

இதனால் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. சுற்றுலா துறைக்கும் நிதி இழப்பு ஏற்பட்டதால், முன்னாள் முதல்வர் சித்தராமையா உத்தரவின் படி, வனத்துறை அதிகாரிகள், இந்திய வனவிலங்கு நிறுவன நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் முதல்வர் சிவகுமாரிடம், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அறிக்கை தாக்கல் செய்தனர். இதுகுறித்து பெங்களூரு விதான் சவுதாவில் வன துறை அதிகாரிகளுடன், முதல்வர் நேற்று ஆலோசனை நடத்தினார்.

சபாரி வாகனங்கள், சுற்றுலா பயணியர் எண்ணிக்கையை வரையறுக்க வேண்டும்; சவாரி நேரத்தை குறைக்க வேண்டும்; 25க்கும் மேற்பட்ட இடங்களில் வேட்டை தடுப்பு முகாம் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல அம்சங்கள் குறித்து, நிபுணர் குழு கூறியதை அதிகாரிகளுடன் எடுத்து கூறினார்.

நிபுணர் குழு அறிக்கையை ஏற்று கொண்டு, பண்டிப்பூர், நாகரஹொளேயில் இனி தினமும் முழு நேர சவாரி துவங்கப்படும் என்று அறிவித்தார்.

இனிமேல் தினமும், காலை 6:15 மணி முதல், காலை 9:00 மணி வரை; மதியம் 2:15 மணி முதல், மாலை 5:30 மணி வரையும், சுற்றுலா பயணியர் சவாரி அழைத்து செல்லப்படுவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us