/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புதிய தகவல் தொழில்நுட்ப நகரம் பிடதியில் அமைக்க அரசு திட்டம்
/
புதிய தகவல் தொழில்நுட்ப நகரம் பிடதியில் அமைக்க அரசு திட்டம்
புதிய தகவல் தொழில்நுட்ப நகரம் பிடதியில் அமைக்க அரசு திட்டம்
புதிய தகவல் தொழில்நுட்ப நகரம் பிடதியில் அமைக்க அரசு திட்டம்
ADDED : நவ 19, 2025 09:01 AM

பெங்களூரு: ''பிடதியில் புதிய தகவல் தொழில்நுட்ப நகரம் அமைக்கப்படும். பல வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்கள், பெங்களூரில் பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய முன்வந்துள்ளன,'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
பெங்களூரு சதாசிவ நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
உலகின் பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் தினமும் என்னை பார்க்க வருகின்றனர். இங்கு தொழில் துவங்க பலர் ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கு எங்களால் முடிந்த வரை ஆதரவு அளித்து வருகிறோம்.
அவர்கள் இங்கு தொழிற்சாலைகள் திறந்து, வேலை வாய்ப்பு வழங்கி, வருமானம் ஈட்ட வேண்டும். அதற்காகவே, அவர்களை ஊக்குவிக்கிறோம்.
பெங்களூரு தெற்கு மாவட்டத்தின் பிடதியில் புதிய தகவல் தொழில்நுட்ப நகரம் அமைக்கப்படும். பல வெளிநாடுகளை சேர்ந்த தலைவர்கள், பெங்களூரில் பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய முன்வந்துள்ளனர்
இங்குள்ள திறமைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட்டால், கர்நாடகா புதிய திசையில் செல்லும். உலகளவில் போட்டியிட வேண்டும் என்று அடுத்த தலைமுறையினரிடம் கூறி வருகிறேன்.
எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது எங்கள் பணி. வணிகத்துக்கு ஏற்ற சூழலை உருவாக்குவோம். சாலைப் பணிகள் குறித்து பல நிறுவனங்களின் விமர்சனத்தை வரவேற்பதை போன்று, பாராட்டுகளையும் வரவேற்கிறோம். மக்களுக்கு சேவை செய்வது, எங்கள் உரிமை.
இவ்வாறு அவர் கூறினார்.

